திருப்பத்தூர் மாவட்டத்தில் 19 நாட்களுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் குறைந்த அளவு வினியோகம் - கலெக்டர் தகவல்


திருப்பத்தூர் மாவட்டத்தில் 19 நாட்களுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் குறைந்த அளவு வினியோகம் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 22 May 2020 12:14 AM GMT (Updated: 22 May 2020 12:14 AM GMT)

திருப்பத்தூர் மாவட்டத்தில் 19 நாட்களுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் குறைந்த அளவு வினியோகிக்கப்படும். என்று சிவன்அருள் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன்அருள் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறிருப்பதாவது:-

திருப்பத்தூர், 

திருப்பத்தூர் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் பராமரிக்கப்பட்டு வரும் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இன்று (நேற்று) முதல் அடுத்த மாதம் (ஜூன்) 9-ந்தேதி வரை 19 நாட்கள் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் பராமரிப்பு பணிகள் மேட்டூர் செக்கானூரில் நடக்க உள்ளது.

எனவே மேற்கண்ட நாட்களில் குடிநீர் வினியோக அளவு குறைக்கப்படுகிறது. இதனால் இத்திட்டத்தின் பயனாளிகளான திருப்பத்தூர் மாவட்டத்துக்குட்பட்ட திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய 4 நகராட்சிகளுக்கும், நாட்டறம்பள்ளி, உதயேந்திரம், ஆலங்காயம் ஆகிய 3 பேரூராட்சிகளுக்கும், ஆலங்காயம், ஜோலார்பேட்டை, கந்திலி, மாதனூர் ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் குடிநீர் கையிருப்புக்கேற்ப குறைந்த அளவு வினியோகிக்கப்படும்.

இந்த நாட்களில் பற்றாக்குறையை சமாளிக்க உள்ளூர் குடிநீரை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ளும். ஆகவே திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story