குடிபோதையில் பணியில் இருந்த போலீஸ் ஏட்டு பணி இடைநீக்கம்


குடிபோதையில் பணியில் இருந்த போலீஸ் ஏட்டு பணி இடைநீக்கம்
x
தினத்தந்தி 22 May 2020 7:58 AM IST (Updated: 22 May 2020 7:58 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் குடிபோதையில் பணியில் இருந்த போலீஸ் ஏட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபடுகிறார்கள். அதன்படி சேலம் மாநகர எல்லைக்குள் உள்ள ஏற்காடு அடிவாரம், கோரிமேடு உள்ளிட்ட பகுதிகளில் கன்னங்குறிச்சி போலீசார் தினமும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி இரவு கன்னங்குறிச்சி போலீஸ் ஏட்டு பழனிவேல் என்பவர் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாநகர போலீஸ் கமிஷனருக்கு புகார் சென்றது. இதுதொடர்பாக விசாரணை நடத்த போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு கமிஷனர் உத்தரவிட்டார்.

அதன்பேரில் போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி அறிக்கையை கமிஷனரிடம் சமர்ப்பித்தனர். விசாரணையில் குடிபோதையில் பழனிவேல் ரோந்து பணியில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து போலீஸ் ஏட்டு பழனிவேலை பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்து போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இந்த சம்பவம் போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story