கோவையில் இருந்து ஜார்க்கண்ட், பீகார் மாநிலங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கம் 3200 வடமாநில தொழிலாளர்கள் சென்றனர்


கோவையில் இருந்து  ஜார்க்கண்ட், பீகார் மாநிலங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கம்  3200 வடமாநில தொழிலாளர்கள் சென்றனர்
x
தினத்தந்தி 24 May 2020 11:55 PM GMT (Updated: 24 May 2020 11:55 PM GMT)

கோவையில் இருந்து ஜார்க்கண்ட் மற்றும் பீகார் மாநிலத்துக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன.

கோவை,

ஊரடங்கு உத்தரவு காரணமாக புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப சிறப்பு ரெயில்கள் நாடு முழுவதும் இயக்கப்பட்டு வருகிறது. கோவையில் இருந்து ஒடிசா, பீகார், ஜார்க்கண்ட், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு கடந்த 8-ந் தேதி முதல் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு நேற்று மாலை சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. இது போல் இரவு 8 மணி அளவில் பீகார் மாநிலத்துக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது.

இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

கோவையில் இருந்து இன்று (அதாவது நேற்று) ஜார்க்கண்ட் மற்றும் பீகார் மாநிலத்துக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. இதில் தலா 1,600 பேர் வீதம் 3200 தொழிலாளர்கள் பயணம் செய்தனர். கோவையில் இருந்து வடமாநிலங்களுக்கு கடந்த 8-ந் தேதி முதல் தற்போது வரை 27 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு உள்ளன. இதன்மூலம் 35 ஆயிரம் தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்பி உள்ளனர். இதுதவிர கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து மணிப்பூர் மாநிலத்திற்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் கோவை வந்தது. இந்த ரெயிலில் கோவையில் பணிபுரிந்த மணிப்பூர் மாநில தொழிலாளர்கள் 200 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story