மாவட்ட செய்திகள்

கம,கம வாசனையோடு களைகட்டிய பிரியாணி விற்பனை + "||" + Biryani sale with aroma

கம,கம வாசனையோடு களைகட்டிய பிரியாணி விற்பனை

கம,கம வாசனையோடு களைகட்டிய பிரியாணி விற்பனை
திருப்பூரில் பிரியாணி கடைகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று பிரியாணி பார்சல் வாங்கி சென்றனர்.
உலகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் திருப்பூரிலும் ரம்ஜான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ஊரடங்கு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்ததால் முஸ்லிம்கள் வழக்கமான கூட்டுத் தொழுகையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இருந்தாலும் திருப்பூரில் உள்ள முஸ்லிம்கள் அவரவர் வீட்டிலேயே குடும்பத்தினருடன் தொழுகையை மேற்கொண்டனர். இது ஒருபுறமிருக்க, ரம்ஜான் என்றாலே நினைவுக்கு வரக்கூடிய பிரியாணி தயாரிப்பும் நேற்று திருப்பூரில் களைகட்டியது. முஸ்லிம்கள் பெரும்பாலானோர் உறவினர்களோடு ஒன்று சேர்ந்து பிரியாணி சமைத்து உண்டு மகிழ்ந்தனர்.

இதேபோல் நண்பர்கள் மற்றும் ஏழைகளுக்கும் பிரியாணியை வழங்கினர். இவ்வாறு நேற்று பல இடங்களிலும் அதிக அளவில் பிரியாணி தயார் செய்யப்பட்டதால் திருப்பூரில் ஆடு, கோழி, மாட்டிறைச்சி போன்றவை அதிக அளவில் விற்பனையானது. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உள்ள இறைச்சிக்கடைகளில் நேற்று அதிகாலை முதலே இறைச்சி விற்பனை மும்முரமாக நடந்தது. இதேபோல் பெரிய கடை வீதி, காங்கேயம் கிராஸ் ரோடு உள்ளிட்ட மாநகரின் பல பகுதிகளிலும் உள்ள பெரும்பாலான பிரியாணி கடைகளிலும் பிரியாணி விற்பனை மும்முரமாக நடந்தது. இதில் சில கடைகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று பிரியாணி பார்சல் வாங்கி சென்றனர். இவ்வாறு வீடு, கடைகள் என எங்கும் பிரியாணி மயமாய் இருந்ததால் திருப்பூரின் பல வீதிகள் பிரியாணி வாசத்தால் கமகமத்தன.

தொடர்புடைய செய்திகள்

1. திருப்பூரில் போலீசார் தீவிர கண்காணிப்பு - வெளியே வரும் வாகனங்கள் பறிமுதல்
திருப்பூர் மாவட்டத்தில் ஊரடங்கை மீறி வெளியே வரும் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர்.
2. திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 180 ஆக உயர்வு
திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 180 ஆக உயர்ந்துள்ளது.
3. தாயின் கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் 6 ஆண்டுகளுக்கு பிறகு தோண்டி எடுப்பு
தாயின் கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் 6 ஆண்டுகளுக்கு பிறகு தோண்டி எடுக்கப்பட்டது.
4. தொழிற்சாலைகள் இயங்க தொடங்கியதால் திருப்பூர், கரூர், சேலம் செல்லும் பஸ்களில் கூட்டம் அதிகரிப்பு
தொழிற்சாலைகள் இயங்க தொடங்கியதால் திருப்பூர், கரூர், சேலம் செல்ல புறநகர் பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.
5. திருப்பூர் மாவட்டத்தில் 5 மையங்களில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம் 1,687 ஆசிரியர்கள் ஈடுபடுகிறார்கள்
திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி 5 மையங்களில் இன்று(புதன்கிழமை) தொடங்குகிறது. இந்த பணியில் 1,687 ஆசிரியர்கள் ஈடுபடுகிறார்கள்.