திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா


திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 28 May 2020 5:15 AM IST (Updated: 27 May 2020 11:54 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் பெரும்பாலும் சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் வரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. இதுவரை திருவண்ணாமலை மாவட்டத்தில் 270 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று மேலும் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இவர்கள் பெரும்பாலும் சேத்துப்பட்டு, செய்யாறு, திருவண்ணாமலை மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 7 பேர் மும்பையில் இருந்தும், கேரளாவில் இருந்து ஒருவரும், சென்னையில் இருந்து 4 பேரும், திருச்சியில் இருந்து ஒருவரும், காஞ்சீபுரத்தில் இருந்து ஒருவரும் வந்தவர்கள்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று வரை 21 ஆயிரத்து 467 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 20 ஆயிரத்து 797 பேருக்கு பரிசோதனை முடிவு வந்துள்ளது. 670 பேருக்கு பரிசோதனை முடிவு வரவில்லை.

ஜமுனாமரத்தூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 20 பேர் நீங்கலாக பாதிக்கப்பட்டு உள்ள 264 பேரில் சென்னையில் இருந்து வந்த 112 பேருக்கும், மும்பையில் இருந்து வந்த 70 பேருக்கும், பிற மாவட்டத்தை சேர்ந்த 4 பேருக்கும், பிற மாநிலங்களை சேர்ந்த 22 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. மீதமுள்ள 56 பேர் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

Next Story