கிருஷ்ணகிரியில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


கிருஷ்ணகிரியில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 Jun 2020 1:53 AM GMT (Updated: 5 Jun 2020 1:53 AM GMT)

கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட மையத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட மையத்தின் சார்பில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மதிய உணவு இடைவேளையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நடராஜன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். வெங்கடேசன், நந்தகுமார், மஞ்சுளா ஆகியோர் வாழ்த்தினர். மாவட்ட பொருளாளர் தேவராஜ் நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டத்தின் போது, அனைத்து காலிப்பணியிடங்களையும் போர்க்கால அடிப்படையில் நிரப்பிட வேண்டும், தொழிலாளர் நலச்சட்டங்கள் திருத்தப்பட்டதை கைவிட வேண்டும், பணி நேரத்தை 12 நேரமாக அதிகரிக்கக்கூடாது, பொதுத்துறை நிறுவனங்களை கார்ப்பரேட் மற்றும் பெரு முதலாளிகளுக்கு தாரை வார்க்கக்கூடாது, பல்வேறு மாநிலங்களில் தற்போதைய கொரோனா நோய்ப்பரவலைக் காரணம் காட்டி ஊதிய வெட்டு, சரண்விடுப்பு ரத்து, வேலை நேரம் 12 மணி நேரமாக அதிகரிப்பு, காலிப்பணியிடங்களை நிரப்பிடவும், வேலை நியமனத்திற்கும் தடை, அகவிலைப்படி உயர்வு ரத்து, பொது வருங்கால வைப்பு நிதியிலிருந்து முன்பணம் எடுப்பது நிறுத்தி வைப்பு, பயணப்படி மற்றும் விடுப்பு கால சலுகைகள் ரத்து போன்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.


Next Story