நுரையீரல் தொற்றால் தொழிலாளி சாவு:போச்சம்பள்ளி தனியார் மருத்துவமனை பகுதி ‘சீல்’ வைப்பு


நுரையீரல் தொற்றால் தொழிலாளி சாவு:போச்சம்பள்ளி தனியார் மருத்துவமனை பகுதி ‘சீல்’ வைப்பு
x
தினத்தந்தி 6 Jun 2020 6:57 AM IST (Updated: 6 Jun 2020 6:57 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள உப்பாரப்பட்டியை சேர்ந்தவர் 48 வயது தொழிலாளி. உடல் நலக்குறைவு காரணமாக அவர் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று கொண்டு வரப்பட்டார்.

மத்தூர்,

தொழிலாளிக்கு  வழியில் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அவரை போச்சம்பள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து அவரை கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த நிலையில் அவர் நுரையீரல் தொற்று காரணமாக இறந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து தொழிலாளி முதலில் சிகிச்சை பெற்ற போச்சம்பள்ளி தனியார் மருத்துவமனை உள்ள பகுதி முழுவதும் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது தொழிலாளிக்கு கொரோனா தொற்று இல்லை. இருந்த போதிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதி ‘சீல்’ வைக்கப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது என்றனர்.

Related Tags :
Next Story