நாமக்கல்லில், குழந்தை தொழிலாளர் முறை அகற்றுதலுக்கான உறுதிமொழி ஏற்பு - கலெக்டர் மெகராஜ் தலைமையில் நடந்தது


நாமக்கல்லில், குழந்தை தொழிலாளர் முறை அகற்றுதலுக்கான உறுதிமொழி ஏற்பு - கலெக்டர் மெகராஜ் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 12 Jun 2020 9:45 PM GMT (Updated: 13 Jun 2020 2:31 AM GMT)

நாமக்கல்லில் கலெக்டர் மெகராஜ் தலைமையில் குழந்தை தொழிலாளர் முறை அகற்றுதலுக்கான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. மேலும் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பை வலியுறுத்தி கையெழுத்து இயக்கமும் நடத்தப்பட்டது.

நாமக்கல்,

தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தின் சார்பில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடந்தது. கலெக்டர் மெகராஜ் தலைமை தாங்கி முதல் கையெழுத்திட்டு, இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குனர் அந்தோணி ஜெனித், தொழிலாளர் உதவி ஆணையர் சங்கர், நாமக்கல் முத்திரை ஆய்வாளர் மாயவன், தொழிலாளர் உதவி ஆய்வாளர் விஜய், கண்காணிப்பாளர் மாலா, ரெட்கிராஸ் மாவட்ட செயலாளர் ராஜேஸ்கண்ணன் மற்றும் திட்ட களப்பணியாளர்கள் கையெழுத்திட்டனர்.

முன்னதாக கலெக்டர் மெகராஜ் தலைமையில், குழந்தை தொழிலாளர் முறை அகற்றுதலுக்கான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில் 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை எந்த வித பணியிலும் ஈடுபடுத்த மாட்டோம் என்றும், அவர்களை பள்ளிக்கு செல்ல ஊக்குவிப்போம் எனவும் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலுமாக அகற்றிட விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, தமிழகத்தை குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக மாற்றுவதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்வது என உறுதிமொழி ஏற்கப்பட்டது. அப்போது அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றி நின்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

Next Story