குடியிருப்பு பகுதியில் உள்ள நுண் உர செயலாக்க மையத்தை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி மனு


குடியிருப்பு பகுதியில் உள்ள நுண் உர செயலாக்க மையத்தை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி மனு
x
தினத்தந்தி 17 Jun 2020 5:42 AM IST (Updated: 17 Jun 2020 5:42 AM IST)
t-max-icont-min-icon

குடியிருப்பு பகுதியில் உள்ள நுண் உர செயலாக்க மையத்தை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி மனு.

குளித்தலை,

குளித்தலை பகுதி இளைஞர்கள், பொதுமக்கள் கூட்டமைப்பினர் மற்றும் பெரியார் நகர் பகுதி மக்கள் நேற்று குளித்தலை நகராட்சி ஆணையரிடம் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:-

குளித்தலை பெரியார் நகர் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பெரியார் நகர் உருவாக்கப்பட்டபோது இங்கு பூங்கா அமைப்பதற்காக நகராட்சி நிர்வாகத்தால் இடம் ஒதுக்கப்பட்டது. அந்த இடத்தில் தற்போது நகராட்சி நிர்வாகம் திடக்கழிவு மேலாண்மை மைய கட்டிடம் (நுண் உர செயலாக்க மையம்) அமைத்து தினந்தோறும் அவ்விடத்தில் குப்பைகளை கொட்டி தரம் பிரித்து வருகின்றனர். இதனால், இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் அங்கு குடியிருக்க முடியவில்லை. ஈக்கள், கொசுக்கள் பொதுமக்களை கடிப்பதால் நோய்த் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. இப்பிரச்சினை தொடர்பாக ஏற்கனவே மனு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த நுண் உர செயலாக்க மையத்தை குடியிருப்புகள் இல்லாத வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். மேலும், அந்த இடத்தில் பூங்கா அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.



Next Story