விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 400 ஆக உயர்வு


விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 400 ஆக உயர்வு
x
தினத்தந்தி 26 Jun 2020 8:43 AM IST (Updated: 26 Jun 2020 8:43 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டத்தில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 400 ஆக உயர்ந்துள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 17,115 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 372 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 1,645 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. 148 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 12 சிறப்பு தனிமைப்படுத்தும் மையங்களில் 365 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. சிவகாசி கட்டளைப்பட்டியை சேர்ந்த 21 வயது, சாத்தூர் ஒத்தையாலை சேர்ந்த 24 வயது, கனைஞ்சாம்பட்டியை சேர்ந்த 24 வயது, விருதுநகர் பாண்டியன்நகரை சேர்ந்த 48 வயது, ஆவியூரை சேர்ந்த 20 வயது, விருதுநகர் காந்திநகரை சேர்ந்த 28 வயது, மூளிப்பட்டியை சேர்ந்த 24 வயது, எம்.புதுப்பட்டி புதுக்கோட்டையை சேர்ந்த 24 வயது, கல்குறிச்சியை சேர்ந்த 37 வயது, மறவர்பெருங்குடியை சேர்ந்த 10 வயது, குன்னூரை சேர்ந்த 7 வயது ஆகிய 11 பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

காரியாபட்டி

காரியாபட்டியை சேர்ந்த 27 வயது, 43 வயது நபர்கள், கல்குறிச்சியை சேர்ந்த 35 வயது, 15 வயது நபர்கள், பந்தல்குடியை சேர்ந்த 36 வயது நபர், வீரசோழன் கிராமத்தை சேர்ந்த 25, 24 வயது நபர்கள், மறவர்பெருங்குடியை சேர்ந்த 39 வயது நபர், கிருஷ்ணன்கோவில் எழில்நகரை சேர்ந்த 54 வயது நபர் உள்பட 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

400 ஆக உயர்வு

விருதுநகர் மாவட்டத்தில் 28 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 400 ஆக உயாந்துள்ளது. நேற்று முன்தினம் நகர் பகுதிகளில் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருந்த நிலையில் நேற்று முழுவதும் கிராமப்பகுதிகளிலேயே அதிகமானவர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இதன் மூலம் இந்த மாவட்டத்தில் நகர் பகுதிகளிலும், கிராமப்பகுதிகளிலும் நோய் பரவல் அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், நோய் பரவலை தடுக்க தேவையான புதிய உத்திகளையும் கையாள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Next Story