தகவல் அளிக்காமல் அரியலூருக்கு வருபவர்கள் குடும்ப உறுப்பினர்களுடன் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்


தகவல் அளிக்காமல் அரியலூருக்கு வருபவர்கள் குடும்ப உறுப்பினர்களுடன் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்
x
தினத்தந்தி 27 Jun 2020 4:32 AM IST (Updated: 27 Jun 2020 4:32 AM IST)
t-max-icont-min-icon

தகவல் அளிக்காமல் அரியலூருக்கு வருபவர்கள் குடும்ப உறுப்பினர்களுடன் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் கலெக்டர் ரத்னா எச்சரிக்கை.

அரியலூர்,

கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து அரியலூர் மாவட்டத்திற்கு வருகை புரியும் நபர்கள் தனிமைபடுத்தும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு உரிய மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, 7 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்கு பின்பு மருத்துவ பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியாமல் வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து அரியலூர் மாவட்டத்திற்கு வரும் அனைவரும் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தந்து தனிமைப்படுத்துதல் முகாமில் தங்கி மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு தகவல் அளிக்காமல் எவரேனும் வந்து, அதனை மாவட்ட நிர்வாகம் பின்னர் கண்டறிந்தால், அவர்கள் மட்டுமல்லாது அவர்களின் குடும்பம் உறுப்பினர்களையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, குடும்ப உறுப்பினர்களும் 7 நாட்கள் தனிமைபடுத்துதல் முகாம்களில் தங்க வைக்கப்படுவர். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Next Story