தூத்துக்குடியில் கொரோனா தடுப்பு பணிகளைசிறப்பு அலுவலர்-கலெக்டர் ஆய்வு


தூத்துக்குடியில் கொரோனா தடுப்பு பணிகளைசிறப்பு அலுவலர்-கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 27 Jun 2020 11:45 PM GMT (Updated: 27 Jun 2020 7:50 PM GMT)

தூத்துக்குடியில் கொரோனா தடுப்பு பணிகளை சிறப்பு அலுவலர்-கலெக்டர் ஆய்வு நடத்தினர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளை கண்காணிப்பதற்கு சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரியான குமார் ஜெயந்த் மற்றும் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆகியோர் நேற்று தூத்துக்குடி சுனாமி காலனி, டூவிபுரம் உள்ளிட்ட தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் சென்று ஆய்வு நடத்தினர்.

தொடர்ந்து மில்லர்புரத்தில் அமைக்கப்பட்டுள்ள காய்கறி மார்க்கெட்டில் பொதுமக்கள், வியாபாரிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்கிறார்களா? என்று ஆய்வு நடத்தினர். பின்னர் அவர்கள், தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் உள்ள அடிப்படை வசதிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் சிறப்பு அலுவலர் குமார் ஜெயந்த் கூறியதாவது:-


தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 24 ஆயிரத்து 584 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 789 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை என்று கூறினார். மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story