மண் மாதிரிகள் சேகரிக்கும் பணியை வேளாண் அதிகாரி ஆய்வு


மண் மாதிரிகள் சேகரிக்கும் பணியை வேளாண் அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 27 Jun 2020 10:33 PM GMT (Updated: 27 Jun 2020 10:33 PM GMT)

கிராமத்தில் மண் மாதிரி சேகரிக்கும் பணியை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார்.

அரியலூர்,

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் வட்டாரம் வானதிரையன்பட்டினம் கிராமத்தில் மண் மாதிரி சேகரிக்கும் பணியை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய மண் வள அட்டை இயக்கத்தின் கீழ் 2020-21-ம் ஆண்டில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள 6 வட்டாரங்களிலும் மண் மாதிரிகள் வேளாண்மைத்துறை அலுவலர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு வருகிறது. ஒரு மண் மாதிரிக்கு ஆய்வு கட்டணமாக ரூ.20 மண் பரிசோதனை நிலையத்தில் செலுத்த வேண்டும். பாசன நீர் ஒன்றுக்கு ஆய்வு கட்டணமாக ரூ.20 வசூலிக்கப்படுகிறது. பாசன நீர் சேகரிப்பின் போது அரை மணி நேரம் மோட்டாரை ஓட விட்டு பிறகு தண்ணீரை சுமார் ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்ட சுத்தமான பாட்டிலில் காற்று குமிழிகள் இல்லாமல் சேகரிக்க வேண்டும். இதனுடன் விவசாயிகளின் விவரங்களையும் இணைத்து அனுப்ப வேண்டும். எனவே அரியலூர் மாவட்ட விவசாயிகள் அனைவரும் மண், நீர் பரிசோதனை செய்து பயிருக்கேற்ப சரியான உரமிட்டு நல்ல மகசூல் பெறலாம் என்றார். அப்போது ஜெயங்கொண்டம் வேளாண் உதவி இயக்குனர் (பொறுப்பு) சுப்பிரமணியன், அரியலூர் மண் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர்கள் சுகந்தி, ஆதிகேசவன், உதவி வேளாண்மை அலுவலர்கள் தினேஷ், கோவிந்தராசு, பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story