மாவட்ட செய்திகள்

மதுரையில் கொரோனாவுக்கு மேலும் 7 பேர் பலி 218 பேருக்கு புதிதாக தொற்று + "||" + At Madurai, 7 more people died of coronavirus and 218 were infected

மதுரையில் கொரோனாவுக்கு மேலும் 7 பேர் பலி 218 பேருக்கு புதிதாக தொற்று

மதுரையில் கொரோனாவுக்கு மேலும் 7 பேர் பலி 218 பேருக்கு புதிதாக தொற்று
மதுரையில் கொரோனாவுக்கு சிகிச்சையில் இருந்த மேலும் 7 பேர் பரிதாபமாக இறந்தனர். இதேபோல் நேற்று ஒரே நாளில் 218 பேருக்கு புதிதாக நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.
மதுரை,

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் உயிரிழப்பு கடந்த சில நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தநிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 7 பேர் நேற்று உயிரிழந்தனர். அவர்கள் மதுரை மாவட்டத்தை சேர்ந்த 37 வயது வாலிபர், 29 வயது பெண், 38 வயது பெண், 63 வயது பெண், 66 வயது ஆண், 73 வயது ஆண், 62 வயது ஆண் ஆகியோர் ஆவர்.


இவர்கள் 7 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்தனர். இந்தநிலையில் அவர்கள் 7 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

218 பேருக்கு தொற்று

இந்த நிலையில் நேற்றும் மதுரையில் 218 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதில் 48 பேர் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள், மீதமுள்ளவர்கள் மதுரை நகர் பகுதியை சேர்ந்தவர்கள்.

இதில் போலீசார், டாக்டர்கள், மருத்துவமனை பணியாளர்கள், அரசு ஊழியர்கள், ராணுவ வீரர் ஆகியோரும் அடங்குவர். சென்னை, கோவை, தூத்துக்குடி உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து வந்த 9 பேருக்கும், மதுரையை சேர்ந்த 3 கர்ப்பிணிகளுக்கும், ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து 90 பேருக்கும் என மொத்தம் ஒரே நாளில் 218 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

1,703 பேர் பாதிப்பு

கொரோனா உறுதிசெய்யப்பட்ட இவர்கள் 218 பேரும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்களின் கண்காணிப்பில் இருக்கிறார்கள். இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா தொடர்பான பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் தங்கியிருந்த பகுதியை சுற்றிலும் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

நேற்றுடன் மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,703 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 548 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 1,135 பேர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மதுரை 2-வது இடம்

நேற்று அதிக கொரோனா பாதிப்பை பதிவு செய்த மாவட்டங்கள் பட்டியலில் மதுரை, 2-வது இடத்தில் இருந்தது. 

தொடர்புடைய செய்திகள்

1. மாநகர பஸ் மோதி என்ஜினீயர் பலி
மாநகர பஸ் மோதி என்ஜினீயர் பலி.
2. கும்மிடிப்பூண்டி அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி விவசாயி பலி
கும்மிடிப்பூண்டி அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி விவசாயி பலியானார்.
3. பழுதாகி நின்ற போலீஸ் வாகனத்தின் மீது மொபட் மோதி பெண் உடற்பயிற்சியாளர் பலி
பழுதாகி நின்ற போலீஸ் வாகனத்தின் மீது மொபட் மோதி பெண் உடற்பயிற்சியாளர் பலியானார்.
4. பொன்னேரி அருகே ஏரியில் மூழ்கி வாலிபர் பலி
பொன்னேரி அருகே ஏரியில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
5. தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதல் வங்கி பெண் அதிகாரி பலி நண்பர் படுகாயம்
கானத்தூர் அருகே சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் வங்கி பெண் அதிகாரி பரிதாபமாக இறந்தார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.