மாவட்ட செய்திகள்

முழு ஊரடங்கு:ராமநாதபுரத்தில் மக்கள் முழு ஒத்துழைப்பு + "||" + Full Curfew: Full cooperation of the people in Ramanathapuram

முழு ஊரடங்கு:ராமநாதபுரத்தில் மக்கள் முழு ஒத்துழைப்பு

முழு ஊரடங்கு:ராமநாதபுரத்தில் மக்கள் முழு ஒத்துழைப்பு
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நேற்று அறிவிக்கப்பட்டிருந்த ஒருநாள் பொது ஊரடங்கு மக்களின் முழு ஒத்துழைப்பு காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
ராமநாதபுரம்,

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஒரு நாள் பொது முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஊரடங்கு அழைப்பை ஏற்று ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்கள் அனைவரும் வெளியில் வராமல் வீடுகளுக்குள் இருந்தனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் புதிய பஸ் நிலைய பகுதி, பாரதிநகர், பழைய பஸ் நிலைய பகுதி, சாலைத்தெரு, அரசு ஆஸ்பத்திரி ரோடு, அரண்மனை, வண்டிக்காரத்தெரு, கேணிக்கரை, சிகில்ராஜவீதி, யானைக்கல் வீதி, சின்னக்கடை உள்ளிட்ட பகுதிகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

பஸ்கள் ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்ததால் பஸ்நிலைய பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. காலை நேரத்தில் பால் வினியோக கடைகள் மட்டும் திறக்கப்பட்டு பின்னர் அடைக்கப்பட்டது. மருந்து கடைகள் தவிர அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டதால் அனைத்து பகுதிகளும் முழுமையாக வெறிச்சோடி காணப்பட்டன. அத்தியாவசிய பணிகளுக்காக கூட வெளியில் செல்லாமல் மக்கள் தவிர்த்து வந்தனர்.

ஒட்டுமொத்தமாக பாரபட்சமின்றி அனைத்து பொதுமக்களுக்கும் அரசின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து மக்கள் ஊரடங்கிற்கு ஆதரவு தெரிவித்ததால் ராமநாதபுரம் நகர் மட்டுமின்றி மாவட்டமே வெறிச்சோடி காணப்பட்டது. ஊரடங்கு சமயத்தில் வெளியில் தேவையின்றி சுற்றித்திரிவதை தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் முகக்கவசம் அணிந்தபடி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

முழு ஒத்துழைப்பு

இதுதவிர கூடுதல் போலீசார் வாகனங்களில் ரோந்து சுற்றி வந்து கண்காணிப்பில் ஈடுபட்டனர். போக்குவரத்து போலீசார் போக்குவரத்தே இல்லாத சாலைகளில் வழக்கம் போல பணிகளில் ஈடுபட்டனர். இதுநாள் வரை அறிவிக்கப்பட்ட ஊரடங்கு சமயங்களை போன்று அல்லாமல் நேற்று வழக்கத்தை விட மக்கள் அதிகஅளவில் ஒத்துழைப்பு கொடுத்து கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வெளியில் வராமல் வீடுகளில் இருந்ததால் சாலைகளில் கால்நடைகளை தவிர மக்கள் நடமாட்டமே கண்ணில்படவில்லை. ஒட்டுமொத்தமாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசின் நடவடிக்கைக்கு மக்களின் மிகப்பெரிய ஒத்துழைப்பாகவே நேற்றைய ராமநாதபுரம் மாவட்ட சாலைகள் காட்சியளித்தன.

தொடர்புடைய செய்திகள்

1. முழு ஊரடங்கு: திருப்பூரில் வெறிச்சோடிய சாலைகள்; கடைகள் அடைப்பு
திருப்பூரில் முழு ஊரடங்கையொட்டி வாகன போக்குவரத்து இன்றி முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.
2. முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடின கடைகள் மூடல்; வீடுகளுக்குள் முடங்கிய பொதுமக்கள்
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கால், தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து கடைகளும் மூடப்பட்டன. வீடுகளுக்குள் பொதுமக்கள் முடங்கியதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
3. சேலத்தை முடக்கி போட்ட முழு ஊரடங்கு: கடைகள் அடைப்பு-சாலைகள் வெறிச்சோடின
சேலம் மாவட்டத்தில் நேற்று தளர்வுகள் இல்லாமல் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. சாலைகள் வெறிச்சோடின. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையை முழு ஊரடங்கு முடக்கி போட்டு விட்டது.
4. தளர்வு இல்லாத முழு ஊரடங்கு: சென்னையில் சாலைகள் வெறிச்சோடின
தமிழகம் முழுவதும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கால் சென்னையில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
5. முழு ஊரடங்கு: நீலகிரியில் கடைகள் மூடல்; வெறிச்சோடிய சாலைகள்
முழு ஊரடங்கையொட்டி நீலகிரியில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் இல்லாததால் சாலைகள் வெறிச்சோடியது.