குடிமராமத்து பணிகள் ; கலெக்டர் சாந்தா ஆய்வு


குடிமராமத்து பணிகள் ; கலெக்டர் சாந்தா ஆய்வு
x
தினத்தந்தி 12 July 2020 7:29 AM IST (Updated: 12 July 2020 7:29 AM IST)
t-max-icont-min-icon

கீழப்புலியூர் ஏரியில் குடிமராமத்து பணிகளை கலெக்டர் சாந்தா ஆய்வு செய்தார்.

பெரம்பலூர்,

தமிழக முதல்-அமைச்சரின் சிறப்பு திட்டமான குடிமராமத்து திட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்டத்தில் 14 பணிகளுக்கு ரூ.3 கோடி 58 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி குன்னம் தாலுகா கீழப்புலியூர் ஏரியில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை கலெக்டர் சாந்தா நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறுகையில், கீழப்புலியூர் ஏரியில் குடிமராமத்து பணிகள் ரூ.29 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. ஏரியில் வரத்து வாய்க்கால் 4 கிலோ மீட்டர் நீளத்திற்கு தூர் வாரும் பணிகளும், ஆயிரத்து 586 மீட்டர் நீளத்திற்கு கரை பலப்படுத்துதல் பணிகளும், 40 மீட்டருக்கு பாசன வாய்க்கால் தூர்வாரும் பணிகளும், 20 எல்லைக்கல் நடுதல் பணிகளும் நடைபெற்று வருகிறது என்றார்.

ஆய்வின் போது உதவி செயற்பொறியாளர் பிரபாகரன், உதவி பொறியாளர் புகழேந்தி, தாசில்தார் சின்னதுரை மற்றும் பாசன சங்க விவசாயிகள் உடனிருந்தனர்.

Next Story