“தினத்தந்தி” செய்தி எதிரொலி: காமராஜர் தற்காலிக மார்க்கெட்டில் வருவாய் அதிகாரி திடீர் ஆய்வு


“தினத்தந்தி”  செய்தி எதிரொலி: காமராஜர் தற்காலிக மார்க்கெட்டில் வருவாய் அதிகாரி திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 14 July 2020 1:24 AM GMT (Updated: 14 July 2020 1:24 AM GMT)

“தினத்தந்தி” செய்தி எதிரொலி காரணமாக காமராஜர் தற்கலிக மார்க்கெட்டில் மாவட்ட வருவாய் அதிகாரி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மார்க்கெட்டிற்கு வரும் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என உத்தரவிட்டார்.

தஞ்சாவூர்,

தஞ்சை குழந்தையேசு கோவில் அருகே காமராஜர் தற்காலிக மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்த மார்க்கெட்டிற்கு வரும் பொதுமக்கள், வியாபாரிகள் சிலர் முக கவசம் அணியாமல் உள்ளனர். இதனால் கொரோனா தொற்று ஏற்படும் என பொதுமக்கள், வியாபாரிகள் அச்சத்துடன் உள்ளனர். இது குறித்து “தினத்தந்தி”யில் செய்தி வெளியிடப்பட்டது.

இதையடுத்து தஞ்சை மாவட்ட வருவாய் அதிகாரி அரவிந்தன் நேற்று காலை தஞ்சை காமராஜர் தற்காலிக மார்க்கெட்டிற்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் மார்க்கெட்டிற்கு வரும் பொதுமக்களும், வியாபாரிகளும் கொரோனா தொற்றை தடுக்க கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். இதை வியாபாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும் மார்க்கெட் காலை 6 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே 6 மணிக்கு பின்னர் எக்காரணத்தை கொண்டும் செயல்படக்கூடாது. வெளிப்புறக்கேட்டை 6 மணிக்கு பின்னர் மூட வேண்டும். மார்கெட்டில் போலீஸ் பாதுகாப்பு வசதியை ஏற்படுத்தவும் உத்தரவிட்டார்.

Next Story