பாடங்களை படிக்க பிளஸ் - 2 மாணவர்களுக்கு வீடியோ பதிவுகள் வினியோகம்


பாடங்களை படிக்க பிளஸ் - 2 மாணவர்களுக்கு வீடியோ பதிவுகள் வினியோகம்
x

கோவையில் பாடங்களை படிக்க பிளஸ்-2 மாணவர்களுக்கு பாடங்கள் அடங்கிய வீடியோ பதிவுகள் மடிக்கணினியில் பதிவேற்றம் செய்து கொடுக்கப்பட்டது.

கோவை,

கொரோனா பரவலை தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது. தனியார் பள்ளிகளில் ஆன் லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின் றன. ஆனால் அரசு பள்ளிகளில் இதுவரை ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படவில்லை.

இந்த நிலையில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்காக கல்வி தொலைக்காட்சி வழியாக 10-ம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாண வர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின் றன. ஆனால் மேற்படிப்புக்காக செல்லும் பிளஸ்-2 மாணவர்களுக்கு பாடங்களை நேரடி யாக நடத்துவது முக்கியம் என்பதால் அவர் களுக்கு புதிய முறையில் பாடங்கள் அடங்கிய வீடியோக்கள் நேற்று முதல் வழங்கப்பட்டன.

வீடியோ பதிவுகள் வழங்குவது எப்படி?

இது குறித்து கோவை கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

பிளஸ்-2 மாணவர்களுக்கு பல்வேறு பாடப் பிரிவுகள் உள்ளன. அந்த பாட பிரிவுகளில் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்களை கொண்டு வகுப்புகளில் அவர்கள் எப்படி பாடங்கள் நடத்துவார்களோ, அப்படி பாடங்கள் நடத்து வதை சென்னை அண்ணா நூற்றாண்டு நூல கத்தில் இந்த வீடியோ எடுக்கப் படுகிறது.

அந்த வீடியோ பதிவுகள் அங்குள்ள சர்வரில் பதிவு செய்யப்பட்டு அங்கிருந்து தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் உள்ள ஹைடெக் லேப் சர்வருக்கு அனுப்பப் படுகிறது. தமிழகத்தில் பள்ளி மாணவர் களின் எண்ணிக்கைக்கேற்ப சில குறிப் பிட்ட பள்ளிகளில் ஹைடெக் லேப் அமைக் கப்பட்டுள்ளது.

6 முதல் 8 வீடியோக்கள்

அதன்படி கோவை மாநகரில் ராஜவீதியில் உள்ள துணி வணிகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அசோகபுரம், ஒண்டிப் புதூர், குனியமுத்தூர், சுண்டப்பாளையம், சிங்கா நல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் இந்த ஹைடெக் லேப்கள் அமைக்கப்பட் டுள்ளன. சென்னையில் உள்ள மெயின் சர்வரில் இருந்து அனுப்பப்படும் வீடியோ பதிவுகள் இந்த பள்ளிகளின் ஹைடெக் லேப்களில் பதிவு செய்யப்பட்டு விடும். அவற்றிலிருந்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர் அறையில் உள்ள கணினியில் அவை பதிவிறக்கம் செய்யப் படும். இதற்கு தான் அதிக நேரம் ஆகிறது. ஒரு பாடத் திற்கான வீடியோ பதிவிறக் கம் செய்வதற்கு 45 நிமிடங்கள் வரை ஆகிறது.

பிளஸ்-2 வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், தாவர வியல், விலங்கியல் உள்பட சில பாடங்கள் 2 பாகங் களிலும் (வால்யூம்), சில பாடங்கள் ஒரு பாகத் திலும் உள்ளன. ஒவ்வொரு பாடத்திற்கும் 6 முதல் 8 வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீடியோவும் அதிகபட்சம் 45 நிமிடங் கள் ஓடக்கூடியவை. பள்ளிகளில் உள்ள ஹை டெக் லேப்பில் இருந்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர் அறையில் உள்ள கணினியில் அவை பதிவிறக்கம் செய்யப் பட்டு அவற்றை பென் டிரைவ்-ல் பதிவேற்றம் செய்யப்படும். அவை மாணவர்களுக்கு வழங்கப்படும்.

ஒப்பிட்டு படிக்க வேண்டும்

இதற்காக பிளஸ்-2 படிக்கும் மாணவர்களை ஒரு நாளுக்கு 30 பேர் வீதம் அந்தந்த குரூப் வாரி யாக பள்ளிக்கு வரு மாறு அவர்களுக்கு முதல்நாள் குறுந்தகவல் அனுப்பப்படும். அதன் படி மாணவர்கள் வந்ததும் அவர்கள் கொண்டு வரும் மடிக்கணினிகளில் (லேப்-டாப்) பென் டிரைவ்-ல் உள்ள பாடங்கள் தொடர்பான வீடியோ பதிவுகள் பதிவிறக்கம் செய்து கொடுக்கப்படு கிறது. வீடியோ பதிவுகள் கொடுக்கும் போதே பிளஸ்-2 மாணவர்களுக்கு பாட புத்தகங்களை யும் கொடுத்துவிடுவோம்.

மாணவர்கள் வீடுகளுக்கு சென்று லேப்- டாப்பில் உள்ள ஆசிரியர்கள் பாடம் நடத்தும் வீடியோ காட்சிகளையும், பாட புத்தகத்தில் உள்ள பாடங்களையும் ஒப்பிட்டு பார்த்து படிக்கு மாறு மாணவர்களை அறிவுறுத்தியுள் ளோம். இதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் சம்பந்தப் பட்ட ஆசிரியர்களுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டுக் கொள்ளலாம் என்றும் மாணவர்களுக்கு கூறப்பட்டுள்ளது.

தினமும் 20 மாணவர்கள்

கொரோனா பரவல் காரணமாக சமூக இடை வெளியை பின்பற்ற வேண்டும் என்பதற்காக மாணவர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் பள்ளிக்கு வரச்சொல்லாமல் தினமும் 20 அல்லது 30 பேர் வீதம் வரவழைத்து அவர்களின் லேப்-டாப்பில் பாடங்களை பதிவேற்றம் செய்து கொடுக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

கோவை ராஜவீதியில் உள்ள துணிவணிகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 30 பேர் நேரில் வந்து பாடங்களுக்கான வீடியோ பதிவுகளை தங்கள் லேப்-டாப்புகளில் பதிவு செய்து கொண்டனர். அவ்வாறு வந்த மாண வர்களுக்கு தெர்மல் ஸ்கேன் கொண்டு பரிசோதிக்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு கிருமி நாசினி கொண்டு கைகழுவ சொல்லி சமூக இடைவெளி விட்டு நிற்குமாறு மாணவிகள் அறிவுறுத்தப்பட்டனர்.

Next Story