மாவட்ட செய்திகள்

சின்னசேலம் அருகே இருதரப்பினர் மோதல்; விவசாயி அடித்துக்கொலை 8 பேர் படுகாயம் + "||" + Bilateral clash near Chinnasalem; Farmer beaten to death 8 injured

சின்னசேலம் அருகே இருதரப்பினர் மோதல்; விவசாயி அடித்துக்கொலை 8 பேர் படுகாயம்

சின்னசேலம் அருகே இருதரப்பினர் மோதல்; விவசாயி அடித்துக்கொலை 8 பேர் படுகாயம்
சின்னசேலம் அருகே இருதரப்பினர் மோதலில் விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்டார். மேலும் 8 பேர் படுகாயமடைந்தனர்.
சின்னசேலம்,

சின்னசேலம் அருகே உள்ள வி.மாமாந்தூர் கிராமம் தெற்கு காட்டுக்கொட்டாயை சேர்ந்தவர் கணேசன் மனைவி வேலுமணி(வயது 50). இவருக்கும் இவருடைய அண்ணன் விவசாயி கோமதுரை(55) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்றும் இவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் இருதரப்பினரும் தங்களது ஆதரவாளர்களுடன் ஒருவரையொருவர் பயங்கர ஆயுதங்களுடன் தாக்கிக்கொண்டனர். இதில் வேலுமணி, வேலுமணியின் மகன் ராஜீவ்காந்தி, தம்பி பாலச்சந்தர், உறவினர் சந்தியா மற்றும் கோமதுரை, அவருடைய மனைவி சந்தோஷம், பரசுராமன், அம்சவேணி, பத்மா ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


சிகிச்சை பலனின்றி சாவு

இதில் பலத்த காயமடைந்த கோமதுரை சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையே இருதரப்பினரும் கீழ்குப்பம் போலீசில் கொடுத்த தனித்தனி புகாரின் பேரில் இருதரப்பை சேர்ந்த 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோமதுரை, நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. நாமக்கல் அருகே மோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்; என்ஜினீயர் சாவு வாலிபர் படுகாயம்
நாமக்கல் அருகே மோட்டார் சைக்கிள்-மொபட் மோதிய விபத்தில் என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார். மற்றொரு வாலிபர் படுகாயம் அடைந்தார்.
2. கார்-மினிலாரி நேருக்கு நேர் மோதல்: தம்பதி உள்பட 5 பேர் உடல் நசுங்கி பலி
வேப்பூர் அருகே கார்-மினிலாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் தம்பதி உள்பட 5 பேர் உடல்நசுங்கி பலியானார்கள்.
3. உசிலம்பட்டி அருகே லாரிகள் மோதல்; 2 பேர் பலி 3 பேர் படுகாயம்
உசிலம்பட்டி அருகே லாரிகள் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் பலியானார்கள். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
4. பெரியபாளையத்தில் மின்கம்பத்தில் வேன் மோதல்; 11 பெண்கள் படுகாயம்
பெரியபாளையத்தில் உள்ள வடமதுரை அருகே கட்டுப்பாட்டை இழந்த வேன் ஒன்று மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த 11 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.
5. கார் மரத்தில் மோதல்; இளம் நடிகைக்கு எலும்பு முறிந்தது
கர்நாடகாவில் கார் மரத்தில் மோதியதில் இளம் நடிகைக்கு எலும்பு முறிந்தது.