முழு ஊரடங்கையொட்டி டாஸ்மாக் கடைகளில் ரூ.17½ கோடிக்கு மது விற்பனை
முழு ஊரடங்கையொட்டி கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.17½ கோடிக்கு மது விற்பனையானது.
கோவை,
கோவை மாவட்டத்தில் நேற்று தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனால் அனைத்து கடைகளும் மூடப்பட்டன. முழு ஊரடங்கு எதிரொலியாக நேற்று முன்தினம் கோவையில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளில் மதுபிரியர்களின் கூட்டம் அலைமோதியது.
இதனால் மது விற்பனையும் அமோகமாக நடந்தது. நேற்று முன்தினம் ஒரேநாளில் கோவை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்பனை குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
ரூ.17½ கோடி விற்பனை
கோவை மாவட்டத்தில் மொத்தம் 295 டாஸ்மாக்கடைகள் உள்ளன. அதில் நிர்வாக வசதிக்காக கோவை வடக்கு மற்றும் கோவை தெற்கு என்று பிரிக்கப்பட்டு உள்ளது. கடந்த 18-ந் தேதி மட்டும் கோவை வடக்கு பகுதியில் ரூ.9 கோடியே 40 லட்சத்துக்கு மது விற்பனை நடந்துள்ளது. இதேபோல் தெற்கு பகுதியில் ரூ.8 கோடியே 2 லட்சத்திற்கு விற்பனையானது. ஒட்டுமொத்த விற்பனை ரூ.17 கோடியே 42 லட்சம் ஆகும். கடந்த 11-ந் தேதியில் ரூ.17 கோடி அளவில் மது விற்பனையானது. தற்போது அதைவிட கூடுதலாக மது விற்பனையாகி உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Tags :
Next Story