கும்மிடிப்பூண்டி அருகே மதுபாட்டில்கள் பதுக்கி விற்ற 12 பேர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே மதுபாட்டில்கள் பதுக்கி விற்ற 12 பேர் கைது.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திருட்டுத்தனமாக மதுபாட்டில்கள் கடத்தி விற்பதை தடுக்கும் பொருட்டு மாவட்ட மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு கல்பனா தத் உத்தரவின் பேரில், கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதைத்தொடர்ந்து, ஈகுவார்பாளையம் மேம்பாலம், தேர்வழி, ரெட்டம்பேடு கூட்டுச்சாலை, புதுவாயல் நேதாஜி தெரு, போரக்ஸ், புதுவாயல் சந்திப்பு, கும்மிடிப்பூண்டி சிப்காட், கவரைப்பேட்டைசத்யவேடு சாலை, தண்டலச்சேரி, பல்லவாடா ஆகிய இடங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு பதுக்கி வைத்து திருட்டுத்தனமாக மதுபாட்டில்கள் விற்றதாக புதுவாயலை சேர்ந்த கஸ்தூரி (வயது 55), சண்முகம் (28), ஹரால்ட் (45), ரமேஷ் (44), சுதாகர் (44), ராஜா (50), பிரகாஷ் (38), பிரவீன் குமார் (26), வடிவேல் (34) உள்பட 12 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
இதுகுறித்து கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கண்ட 12 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 305 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Tags :
Next Story