மாவட்ட செய்திகள்

சென்னையில் ரக்‌ஷாபந்தன் கொண்டாட்டம்; ராக்கி கயிறு கட்டி பெண்கள் வாழ்த்து + "||" + Rakshabandhan celebration in Chennai; Girls tie Rakhi Greeting

சென்னையில் ரக்‌ஷாபந்தன் கொண்டாட்டம்; ராக்கி கயிறு கட்டி பெண்கள் வாழ்த்து

சென்னையில் ரக்‌ஷாபந்தன் கொண்டாட்டம்; ராக்கி கயிறு கட்டி பெண்கள் வாழ்த்து
சகோதரத்துவத்தை உணர்த்தும் ரக்‌ஷாபந்தன் திருவிழாவை முன்னிட்டு சென்னையில், ராக்கி கயிறு கட்டி பெண்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
சென்னை,

சகோதரத்துவத்தை உணர்த்தும் ரக்‌ஷாபந்தன் விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. சென்னையிலும் வேப்பேரி, புரசைவாக்கம், சவுகார்பேட்டை, பாரிமுனை, எழும்பூர், தியாகராய நகர், நுங்கம்பாக்கம், மண்ணடி, அமைந்தகரை உள்ளிட்ட பல இடங்களில் ரக்‌ஷாபந்தன் விழா கொண்டாடப்பட்டது.


கொரோனா பீதி காரணமாக ரக்‌ஷாபந்தன் விழா முந்தைய ஆண்டுகளை போல பெரிய அளவில் கோலாகலமாக கொண்டாடப்படவில்லை. ஆனாலும் குழுக்கள், குழுக்களாக பிரிந்து சிலர் ஆர்வமுடன் ரக்‌ஷாபந்தன் விழாவை கொண்டாடினர். ஆண்களை தங்கள் சகோதரர்களாக பாவித்து பெண்கள் ராக்கி கயிறு அணி வித்தும், நெற்றியில் திலகமிட்டும் வாழ்த்துக் களை கூறினர். அதனைத்தொடர்ந்து பெண்களின் கண்ணியம் காக்க பாடுபடுவோம் என்று ஆண்களும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இதுகுறித்து இளம்பெண்கள் சிலர் கூறுகையில், “கொரோனா பீதி காரணமாக வழக்கம்போல இந்த ஆண்டு பெரிய அளவில் ரக்‌ஷாபந்தனை கொண்டாடமுடியவில்லை. ஆனாலும் சகோதரத்துவத்தை உணர்த்தும் இந்த விழாவை விட்டுவிடுவதற்கும் விருப்பம் இல்லை. எனவே உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், சமூக இடைவெளியை கடைபிடித்து விழாவை கொண்டாடுகிறோம்” என்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் 1 லட்சம் வணிகர்களுக்கு கொரோனா பரிசோதனை - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்
சென்னையில் 1 லட்சம் வணிகர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் வேலுமணி தகவல் தெரிவித்துள்ளார்.
2. சென்னையில் சப்-இன்ஸ்பெக்டர் வேலைக்கான உடல் தகுதி தேர்வு தொடங்கியது
சென்னையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலைக்கான உடல் தகுதி தேர்வு தொடங்கியது. கொரோனா இருக்கிறதா? என பரிசோதனை செய்ததற்கான சான்றிதழுடன் வந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
3. சென்னையில் பல்வேறு இடங்களில் மழை
சென்னையில் அயனாவரம், மணலி, பெரம்பூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.
4. சென்னையில் என்.ஐ.ஏ. கிளை: மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
சென்னையில் என்ஐஏ கிளை அலுவலகம் அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
5. சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்று டீசல் விலை லிட்டருக்கு 15 காசுகள் குறைந்து ரூ.76.40க்கு விற்கப்படுகிறது.

ஆசிரியரின் தேர்வுகள்...