திருக்குறுங்குடி பெரியகுளத்திற்கு தண்ணீர் வரத்து விவசாயிகள் மகிழ்ச்சி
திருக்குறுங்குடி பெரியகுளத்திற்கு தண்ணீர் வரத்து விவசாயிகள் மகிழ்ச்சி.
ஏர்வாடி,
களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள திருக்குறுங்குடி பெரியகுளத்தின் மூலம் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. கடந்த 4 மாதங்களாக குளம் வறண்டு காட்சி அளித்தது. இதற்கிடையே கடந்த 2 நாட்களாக திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் சாரல் மழை பெய்து வருகிறது.
இந்த மழையினால் பெரியகுளத்திற்கு தண்ணீர் வர தொடங்கியுள்ளது. தண்ணீர் வரும் கால்வாயில் ஏற்பட்டிருந்த அடைப்புகளை விவசாயிகள் அகற்றினர். 4 மாதத்திற்கு பின் குளத்திற்கு தண்ணீர் வர தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பணகுடி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக லேசான சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் பணகுடி மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள குத்திரபாஞ்சான் அருவி அருகே உள்ள கன்னி மாறன்தோப்பு ஓடை தடுப்பணையை தாண்டி வெள்ளம் பாய்கிறது. இதனால் பணகுடி சுற்றுவட்டார பகுதியில் உள்ள மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Tags :
Next Story