மண்ணிவாக்கம் ஊராட்சியில் செங்கல்பட்டு மாவட்ட திட்ட இயக்குனர் ஆய்வு


மண்ணிவாக்கம் ஊராட்சியில் செங்கல்பட்டு மாவட்ட திட்ட இயக்குனர் ஆய்வு
x
தினத்தந்தி 12 Aug 2020 6:28 AM IST (Updated: 12 Aug 2020 6:28 AM IST)
t-max-icont-min-icon

மண்ணிவாக்கம் ஊராட்சியில் செங்கல்பட்டு மாவட்ட திட்ட இயக்குனர் ஆய்வு.

வண்டலூர், 

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம் மண்ணிவாக்கம் ஊராட்சியில் 2019-2020-ம் ஆண்டு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.24 லட்சம் செலவில் ஊராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரிப்பதற்காக கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதனை செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வகுமார் நேரில் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அப்போது அவருடன் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லீமாரோஸ், மாலதி, மண்ணிவாக்கம் ஊராட்சி மன்ற செயலர் ராமபக்தன் உள்பட பலர் உடன் இருந்தனர்.



Next Story