சுதந்திர தினத்தையொட்டி காட்பாடி ரெயில் நிலையத்தில் போலீசார் சோதனை
சுதந்திரதின விழா நாடு முழுவதும் இன்று (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மக்கள் அதிகமாக கூடும் இடங்கள், மற்றும் காட்பாடி ரெயில் நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
காட்பாடி,
சுதந்திரதின விழா நாடு முழுவதும் இன்று (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மக்கள் அதிகமாக கூடும் இடங்கள், மற்றும் காட்பாடி ரெயில் நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காட்பாடி ரெயில் நிலையம் வழியாக சரக்கு ரெயில் சென்று வருகிறது. சரக்கு ரெயில்களில் தபால் மூட்டைகள் அனுப்பப்படுகிறது. அதற்காக தபால் பார்சல் மூட்டைகள் அங்கு குவிக்கப்பட்டிருந்தன. இதனை காட்பாடி ரெயில்வே போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி கொண்டு சோதனை நடத்தினர்.
மேலும் ரெயில் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள நான்கு சக்கர வாகனங்கள், கார்களில் ஏதாவது பொருட்கள் வைக்கப்பட்டு உள்ளதா? என போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்தனர். காட்பாடி ரெயில் நிலையத்திற்குள் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா மூலம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுசேவை ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு இருந்தாலும் ரெயில் நிலைய வளாகத்துக்குள் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story