மாவட்ட செய்திகள்

கர்நாடகத்தில் பசுவதை தடுப்பு சட்டம்? மந்திரி பிரபு சவுகான் பேட்டி + "||" + In Karnataka Cow Prevention Act Interview with Minister Prabhu Chauhan

கர்நாடகத்தில் பசுவதை தடுப்பு சட்டம்? மந்திரி பிரபு சவுகான் பேட்டி

கர்நாடகத்தில் பசுவதை தடுப்பு சட்டம்? மந்திரி பிரபு சவுகான் பேட்டி
கர்நாடகத்தில் பசுக்களை பாதுகாக்க பசுவதை தடுப்பு சட்டத்தை கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளதாக மந்திரி பிரபு சவுகான் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,

கர்நாடகத்தில் பசுக்களை பாதுகாக்க பசு சஞ்சீவினி திட்டத்தின் கீழ் சிறப்பு ஆம்புலன்ஸ் வாகனத்தை பெங்களூரு விதானசவுதாவில் முதல்-மந்திரி எடியூரப்பா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் கால்நடைத் துறை மந்திரி பிரபு சவுகான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் மந்திரி பிரபு சவுகான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-


கர்நாடகத்தில் முதல் முறையாக விவசாயிகளின் வீட்டுக்கு வரும் வகையில் பசு சஞ்சீவினி திட்டத்தை முதல்-மந்திரி எடியூரப்பா தொடங்கி வைத்துள்ளார். கால்நடைகளை பாதுகாக்கும் பொருட்டு, அதற்காக இலவச தொலைபேசி எண்ணும் வெளியிடப்பட்டுள்ளது. காயம் அடையும், நோய் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கும் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான அனைத்து மருத்துவ கருவிகளும் பசு சஞ்சீவினி ஆம்புலன்சில் உள்ளன. அறுவை சிகிச்சை செய்வதற்கு தேவையான வசதிகளும் உள்ளன.

தற்போது 15 மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மாவட்டங்களிலும் இந்த ஆம்புலன்ஸ் வாகனங்கள் சேவை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பசுக்களை பாதுகாக்க பசுவதை தடுப்பு சட்டத்தை கொண்டு வருவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. அந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கையும் அரசு எடுத்து வருகிறது. சட்டசபை கூட்டத்தொடரின் போது விவாதித்து, அந்த சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கும் அரசு தயாராக உள்ளது.

மந்திரிசபை விரிவாக்கம் அல்லது மாற்றியமைப்பது குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா மற்றும் பா.ஜனதா மேலிட தலைவர்கள் தான் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள். மந்திரிசபையில் இருந்து என்னை நீக்குவது குறித்து தகவல் வெளியாகி இருப்பது பற்றி எனக்கு எந்த தகவலும் வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகத்தில் நவம்பர் 17 முதல் கல்லூரிகளை திறக்க முடிவு - மாநில அரசு அறிவிப்பு
கர்நாடகத்தில் வரும் நவம்பர் 17 முதல் கல்லூரிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.
2. வட கர்நாடகத்தில் வெள்ளம் 174 நிவாரண முகாம்களில் 28,000 பேர் தங்கவைப்பு
வட கர்நாடகம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. 174 நிவாரண முகாம்களில் 28,000 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
3. கர்நாடகத்தில் 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திடீர் பணியிட மாற்றம்: மைசூரு மாவட்ட கலெக்டராக ரோகிணி சிந்தூரி நியமனம் மாநில அரசு உத்தரவு
கர்நாடகத்தில் 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை திடீரென பணியிட மாற்றம் செய்து மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி மைசூரு மாவட்ட கலெக்டராக ரோகிணி சிந்தூரி நியமிக்கப்பட்டு உள்ளார். கர்நாடக அரசு பிறப்பித்து உள்ள உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது.
4. கர்நாடகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்
கர்நாடகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5. கர்நாடகத்தில் 7 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’
கர்நாடகத்தில் கடந்த 2 நாட்களாக இடைவிடாது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மேலும் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.