மாவட்ட செய்திகள்

தோகைமலை அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதல் ; 2 பேர் பலி + "||" + Car-motorcycle collision near Tokaimalai; 2 people were killed

தோகைமலை அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதல் ; 2 பேர் பலி

தோகைமலை அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதல் ; 2 பேர் பலி
தோகைமலை அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் இறந்தனர்.
தோகைமலை,

கரூர் மாவட்டம் தோகைமலை நெடுஞ்சாலையில் குண்னாகவுண்டம்பட்டியில் தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு திருச்சி மாவட்டம் எட்டரை கோப்பு கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் (வயது 37) பணியாற்றி வந்தார். நேற்று மதியம் 2.30 மணியளவில் ராஜசேகர் மோட்டார் சைக்கிளில் சொந்த வேலையாக தோகைமலை சென்று விட்டு, பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு வந்து கொண்டிருந்தார்.


கழுகூர் பஸ் நிலையம் அருகே வந்தபோது, கருர் மாவட்டம் போத்துராவுத் தன்பட்டி ஊராட்சி, குள்ளம்பட்டி கிராமத்தை சேர்ந்த எலக்ட்ரீசியனான பழனிசாமி (50) என்பவர் ‘லிப்ட்’ கேட்டு ஏறினார். அவர்கள் கழுகூர் அருகே புதூர் பிரிவு சாலையில் வந்தபோது, குளித்தலையில் இருந்து மணப்பாறை நோக்கி வந்த கார் அவர்கள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ராஜசேகர், பழனிசாமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

விசாரணை

இது குறித்து தகவல் அறிந்த தோகைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சேலத்தில் பரிதாபம்: குடிசை இடிந்து தொழிலாளி பலி 3 பேர் படுகாயம்
சேலத்தில் குடிசை இடிந்து விழுந்து தொழிலாளி பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
2. ராயக்கோட்டை அருகே மோட்டார்சைக்கிள்-ஸ்கூட்டர் மோதல்; இளம்பெண் பலி
ராயக்கோட்டை அருகே மோட்டார்சைக்கிள்-ஸ்கூட்டர் மோதல்; இளம்பெண் பலி காதலன் கண் முன்பு பரிதாபம்.
3. விக்கிரமங்கலம் அருகே இருதரப்பினர் இடையே மோதல்; 4 பேர் படுகாயம் பெண்கள் உள்பட 11 பேர் மீது வழக்கு
விக்கிரமங்கலம் அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக பெண்கள் உள்பட 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
4. களியக்காவிளை காய்கறி சந்தையில் வரி வசூலிப்பதில் மோதல் போலீஸ் நிலையம் முற்றுகையால் பரபரப்பு
களியக்காவிளை காய்கறி சந்தையில் தீர்வை வசூலிப்பதில் ஏற்பட்ட மோதலால் வியாபாரிகள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
5. புதுவையில் கொரோனாவுக்கு 15 பேர் பலி புதிதாக 388 பேருக்கு தொற்று
புதுவையில் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகபட்சமாக 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நேற்று கொரோனாவுக்கு 15 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக 388 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.