கச்சிராயப்பாளையம் சர்க்கரை ஆலையில் சிறப்பு அரவை பருவம் தொடக்கம்


கச்சிராயப்பாளையம் சர்க்கரை ஆலையில் சிறப்பு அரவை பருவம் தொடக்கம்
x
தினத்தந்தி 31 Aug 2020 9:30 PM GMT (Updated: 1 Sep 2020 3:13 AM GMT)

கச்சிராயப்பாளையம் சர்க்கரை ஆலையில் சிறப்பு அரவை பருவம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

கச்சிராயப்பாளையம், 

கச்சிராயப்பாளையம் பகுதியில் உள்ள கள்ளக்குறிச்சி எண்-2 கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2019-20-ம் ஆண்டுக்கான சிறப்பு அரவை பருவம் மற்றும் 2020-21-ம் ஆண்டுக்கான முதன்மை அரவை பருவம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை இணைய நிர்வாக மேலாண்மை இயக்குனரும், கச்சிராயப்பாளையம் சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனருமான சிவமலர் தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு, முன்னாள் அமைச்சர் ப.மோகன், சர்க்கரை ஆலை அலுவலக மேலாளர் சரவணன், ரசாயன பிரிவு தலைமை அலுவலர் ஜோதி, பொறியாளர் பிரிவு தலைமை அலுவலர் ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக குழு துணைத் தலைவர் பாபு வரவேற்றார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை இணைய தலைவரும், கச்சிராயப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் தலைவருமான ராஜசேகர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் சிறப்பு மற்றும் முதன்மை அரவை பருவத்தை தொடங்கி வைத்தார். இதுபற்றி சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் சிவமலர் கூறுகையில், 8-வது சிறப்பு அரவை பருவத்தில் 80ஆயிரம் டன் கரும்பும், 24-வது முதன்மை அரவை பருவத்தில் 3 லட்சத்து 96 ஆயிரம் டன் கரும்பும் அரவை செய்யப்பட உள்ளது. மேலும் ஆலை நிர்வாகம் சார்பில் விவசாயிகளுக்கு மானியவிலையில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தொடக்க நிகழ்ச்சியில் நிர்வாக குழு இயக்குனர்கள் அமுதா, சிதம்பரம், அ.தி.மு.க. ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் அய்யப்பன், ராஜேந்திரன், அய்யம்பெருமாள், தேவேந்திரன், ஆப்பில், எடுத்தவாய்நத்தம் கூட்டுறவு சங்க தலைவர் சண்முகம் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் கரும்பு பெருக்கு அலுவலர் விஜயகுமார் நன்றி கூறினார்.

Next Story