‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Sept 2020 7:23 AM IST (Updated: 9 Sept 2020 7:23 AM IST)
t-max-icont-min-icon

‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விழுப்புரம்,

‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரியும், ஆன்-லைன் வகுப்பை முறைப்படுத்தக்கோரியும் நேற்று தமிழகம் முழுவதும் தி.மு.க. இளைஞர் அணி மற்றும் மாணவர் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில் விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. இளைஞரணி மற்றும் மாணவர் அணி சார்பில் விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு மத்திய மாவட்ட செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். மாவட்ட அவைத்தலைவர் புகழேந்தி, பொருளாளர் ஜனகராஜ், துணை செயலாளர்கள் புஷ்பராஜ், ஜெயச்சந்திரன், முன்னாள் எம்.பி. லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினகரன், மாணவர் அணி அமைப்பாளர் ஸ்ரீவினோத் ஆகியோர் வரவேற்றனர்.

இதில் காணை ஒன்றிய செயலாளர் கல்பட்டு ராஜா, விழுப்புரம் நகர செயலாளர் சக்கரை, துணை செயலாளர் புருஷோத்தமன், பொதுக்குழு உறுப்பினர் பஞ்சநாதன், முன்னாள் நகரமன்ற கவுன்சிலர் மணவாளன் உள்பட பலர் கலந்துகொண்டு நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், ஆன்லைன் வகுப்பை முறைப்படுத்தக்கோரியும் கோஷம் எழுப்பினர். முடிவில் நகர இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.

இதேபோல் விக்கிரவாண்டி நகர தி.மு.க. சார்பில் விக்கிரவாண்டி அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நகர செயலாளர் நைனா முகமது தலைமை தாங்கினார். முன்னாள் பேரூராட்சி தலைவர் அப்துல்சலாம், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் பாபுஜீவானந்தம், இளைஞரணி துணை அமைப்பாளர் பாலாஜி, மாவட்ட பிரதிநிதி வெங்கடேசன், பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் சர்க்கார்பாபு, நகர மாணவரணி அமைப்பாளர் யுவராஜ், இளைஞர் அணி செயலாளர் கார்த்திக், முன்னாள் கவுன்சிலர் அசோக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story