தென்காசியில் புதிய ரெயில்வே சுரங்கப்பாதையை திறக்க வேண்டும் த.மு.மு.க. கூட்டத்தில் தீர்மானம்
தென்காசியில் புதிய ரெயில்வே சுரங்கப்பாதையை திறக்க வேண்டும் என்று த.மு.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தென்காசி,
தென்காசி தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கோக்கர் ஜான் ஜமால் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கொலம்பஸ் மீரான் வரவேற்று பேசினார்.
மாவட்ட பொருளாளர் செங்கை ஆரிப், மாவட்ட துணை தலைவர் ஷெரிப், ஊடகப்பிரிவு மாநில துணை செயலாளர்கள் ஆதம்பின் ஆஷிக், ஆதம் காசியார், மாவட்ட துணை செயலாளர்கள் சலீம், சித்திக், திவான் ஒலி, ரஜாய், அசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை தலைவர் கோவை செய்யது, மாநில செயலாளர் நயினார் முகம்மது, தலைமை கழக பேச்சாளர் முத்தலிப் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-
சுரங்கப்பாதை
தென்காசி ரெயில் நிலையத்தின் அருகில் புதிதாக அமைக்கப்பட்ட ரெயில்வே சுரங்கப்பாதை பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ளது. எனவே அதனை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு உடனே திறக்க வேண்டும். கொரோனா அல்லாத பிற நோய்களுக்கும் தனியார் ஆஸ்பத்திரிகளில் முறையான சிகிச்சை அளிக்க வேண்டும்.
வருகிற 15-ந்தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள அனைத்து ஆயுள் தண்டனை கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையை திரும்ப பெற வேண்டும்.மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Tags :
Next Story