கங்கனா ரணாவத் பிரச்சினை முடிந்து போன அத்தியாயம் முதல்-மந்திரியை சந்தித்த பிறகு சஞ்சய் ராவத் பேட்டி


கங்கனா ரணாவத் பிரச்சினை முடிந்து போன அத்தியாயம் முதல்-மந்திரியை சந்தித்த பிறகு சஞ்சய் ராவத் பேட்டி
x
தினத்தந்தி 11 Sept 2020 1:24 AM IST (Updated: 11 Sept 2020 1:24 AM IST)
t-max-icont-min-icon

நடிகை கங்கனா ரணாவத் பிரச்சினை முடிந்து போன அத்தியாயம் என்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை சந்தித்த பிறகு சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் கூறினார்.

மும்பை,

நடிகை கங்கனா ரணாவத் பிரச்சினையை தொடர்ந்து நேற்று சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை நேரில் சந்தித்து பேசினார். பின்னர் சஞ்சய் ராவத் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நடிகை கங்கனா ரணாவத் பிரச்சினை முடிந்து போன அத்தியாயம். நாங்கள் அதை மறந்துவிட்டோம். நாங்கள் இப்போது எங்கள் அன்றாட அரசு மற்றும் சமூகப் பணிகளில் மும்முரமாக இருக்கிறோம். கட்சி தொடர்பான சில நிகழ்ச்சிகள் குறித்து விவாதிக்க நான் முதல்-மந்திரியை சந்தித்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

சோனியா அதிருப்தி இல்லை

அப்போது சில பத்திரிகையாளர்கள் கங்கனா ரணாவத் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அதிருப்தியில் இருப்பதாக வெளியான தகவல் குறித்து கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத், “இது தவறான தகவல். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரோ அல்லது சோனியா காந்தியோ தங்கள் வருத்தத்தை தெரிவித்து அறிக்கை வெளியிடவில்லை. நாங்கள் அவரை மும்பைக்கு வரவேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக்கொண்டோம். அவரது கருத்து மும்பை போலீசாரை அவமதிப்பதைத் தவிர வேறில்லை” என்றார்.

Next Story