மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 Sept 2020 8:44 AM IST (Updated: 17 Sept 2020 8:44 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லை அடுத்த மீனாட்சிநாயக்கன்பட்டியில் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் உள்ளது. அதன் முன்பு, தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல்,

திண்டுக்கல்லை அடுத்த மீனாட்சிநாயக்கன்பட்டியில் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் உள்ளது. அதன் முன்பு, தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு குழு நிர்வாகி உமாபதி தலைமை தாங்கினார். மேலும் நிர்வாகிகள் மீனாட்சிசுந்தரம், அபுதாகிர், ராமன், முத்துகுமார் மற்றும் மின்வாரிய தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்ட னர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கொரோனாவால் இறந்த தொழிலாளர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் துணை மின்நிலையங்களை குத்தகைக்கு விடக்கூடாது, முத்தரப்பு ஒப்பந்தத்துக்கு எதிரான உத்தரவுகளை பிறப்பிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Next Story