கர்நாடகத்தில் கொரோனா மரண விகிதத்தை ஒரு சதவீதத்திற்குள் கொண்டுவர முயற்சி - சட்டசபையில் மந்திரி சுதாகர் தகவல்


கர்நாடகத்தில் கொரோனா மரண விகிதத்தை ஒரு சதவீதத்திற்குள் கொண்டுவர முயற்சி - சட்டசபையில் மந்திரி சுதாகர் தகவல்
x
தினத்தந்தி 23 Sept 2020 5:56 AM IST (Updated: 23 Sept 2020 5:56 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் கொரோனா மரண விகிதத்தை ஒரு சதவீதத்திற்குள் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சட்டசபையில் மந்திரி சுதாகர் கூறியுள்ளார்.

பெங்களூரு, 

கர்நாடக சட்டசபையில் நேற்று கொரோனா வைரஸ் பரவல் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் குறித்து பேசினார். அப்போது மருத்துவ கல்வித்துறை மந்திரி சுதாகர் குறுக்கிட்டு பேசும்போது கூறியதாவது:-

கர்நாடகத்தில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு உள்ளத. பெங்களூவில் கொரோனா மரண விகிதம் 1.36 சதவீதமாக உள்ளது. மாநிலத்தின் மற்ற பகுதிகளில் இது 1.54 சதவீதமாக இருக்கிறது. கர்நாடகத்தில் கொரோனா மரண விகிதத்தை ஒரு சதவீதத்திற்கு கீழ் கொண்டுவர அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. கொரோனா தொடர்பான புள்ளி விவரங்களை அரசு மறைப்பதாக காங்கிரஸ் உறுப்பினர் ஈஸ்வர் கன்ட்ரே கூறினார். கர்நாடகத்தில் இருந்து கொண்டு இதுபோல் பேசுவது சரியல்ல.

கொரோனா விஷயத்தில் அரசு தவறான தகவல் வழங்குவதாக கூறுவது தவறு. பரிசோதனை, பாதிப்பு, மரணம் குறித்து அரசு சரியான புள்ளி விவரங்களை வழங்கி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக எண்ணிக்கையில் குணம் அடைந்து வருகிறார்கள். இதையும் உறுப்பினர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். மரணம் குறித்து மட்டும் பேச வேண்டாம். குணம் அடைந்தோர் குறித்தும் பேசுங்கள். உலக அளவில் கொரோனா மரண விகிதம் 3.6 சதவீதமாக உள்ளது. சில நாடுகளில் இது 10 சதவீதமாக கூட இருக்கிறது. அரசு தவறான தகவலை கொடுக்கவில்லை.

இவ்வாறு சுதாகர் கூறினார்.

முன்னதாக ஈஸ்வர் கன்ட்ரே பேசும்போது, “கொரோனா விஷயத்தில் அரசு தவறான தகவல்களை வழங்குகிறது“ என்றார். அதைத்தொடர்ந்து பேசிய முன்னாள் சுகாதாரத்துறை மந்திரி யு.டி.காதர், “கர்நாடகத்தில் மரண விகிதம் எப்படி குறைந்துள்ளது?. 100 பேர் இறந்தாலும் சதவீதத்தில் பார்க்கும்போது அது குறைவாக தான் தெரியும். அதனால் கொரோனா மரணங்கள் குறையவில்லை. சதவீதத்தில் பார்க்கும்போது அது குறைவாக உள்ளது. அதனால் மந்திரி இதுபோன்ற புள்ளி விவரங்களை கொடுத்து நியாயப்படுத்தக்கூடாது“ என்றார்.

Next Story