பயோ மெட்ரிக் கருவியில் கோளாறு: ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகை
பயோ மெட்ரிக் கருவியில் கோளாறு: ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகை.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பயோ மெட்ரிக் கருவி மூலமாக பொருட்கள் வினியோகம் செய்யும் முறையை கலெக்டர் சி.கதிரவன் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து ஈரோடு கள்ளுக்கடைமேடு ஜீவானந்தம் வீதியில் உள்ள ரேஷன் கடையில் நேற்று பயோ மெட்ரிக் கருவி மூலமாக பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டன. அப்போது பொருட்களை வாங்க பலர் கடையின் முன்பு வரிசையில் காத்திருந்தனர். பொதுமக்களின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டு மண்எண்ணெய் வினியோகம் செய்யப்பட்டது.
அந்த கருவியில் ரேஷன் கார்டுதாரர்கள் பலரின் கைரேகை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மீண்டும், மீண்டும் கைரேகை பதிவு செய்வது பார்த்தபோது காலதாமதம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், கருவியை பயன்படுத்தாமல் பொருட்களை வழங்க கோரி ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும், சூரம்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து சென்றனர்.

Related Tags :
Next Story