2014 முதல் 2020 வரையிலான அரியர் தேர்வுகளை எழுத விண்ணப்பிக்கலாம் பாரதிதாசன் கல்லூரி முதல்வர் தகவல்


2014 முதல் 2020 வரையிலான அரியர் தேர்வுகளை எழுத விண்ணப்பிக்கலாம் பாரதிதாசன் கல்லூரி முதல்வர் தகவல்
x
தினத்தந்தி 24 Sep 2020 10:45 PM GMT (Updated: 24 Sep 2020 10:45 PM GMT)

அரியர் தேர்வுகளை எழுத விரும்பும் மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுவை பாரதிதாசன் மகளிர் கல்லூரி முதல்வர் சுப்பிரமணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.

புதுச்சேரி,

புதுவை பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் 2014 முதல் 2016-ம் ஆண்டுவரை படித்த மாணவிகளில் இன்னும் தேர்ச்சி பெறாமல் நிலுவையில் வைத்துள்ள தாள்களுக்குரிய (அரியர் பேப்பர்) தேர்வும் 2019-20 கல்வியாண்டில் இளங்கலை கல்வியை முடிக்கும் மாணவியர் (இறுதியாண்டு பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்.) தேர்வும் அடுத்த (அக்டோபர்) மாதம் 12-ந்தேதி முதல் தொடங்குகிறது.

அதேபோல் 2016, 2017-ம் ஆண்டுகளில் முதுகலை (எம்.காம்., எம்.எஸ்சி.) பயின்ற மாணவிகளில் இன்னும் தேர்ச்சி பெறாமல் நிலுவையில் உள்ள தாள்களுக்குரிய (அரியர் பேப்பர்) தேர்வும் அதே நாளில் தொடங்கும்.

2014, 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் இளங்கலை பயின்று இன்னும் தேர்ச்சிபெறாத மாணவிகளும், 2016, 2017 ஆகிய ஆண்டுகளில் முதுகலை படித்து இன்னும் தேர்ச்சிபெறாத மாணவிகளும் தேர்வு விண்ணப்பத்தை தேர்வாணையர் அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பெற்று அக்டோபர் 5-ந்தேதிக்குள் நிறைவு செய்து அளிக்கவேண்டும்.

தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள அனைத்து மாணவிகளும் தேர்வினை வீட்டிலிருந்து இணையவழியிலோ அல்லது கல்லூரியிலோ எழுதலாம். விண்ணப்பத்தில் அதனை உறுதிப்படுத்த வேண்டும். தேர்வுகள் அனைத்தும் புத்தகங்கள், குறிப்பேட்டை பார்த்து எழுதும் முறையில் நடைபெறும். தேர்வு அட்டவணையை அக்டோபர் 8-ந்தேதி முதல் கல்லூரியில் தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story