வேளாண் சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி தபால் நிலையம் முற்றுகை


வேளாண் சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி தபால் நிலையம் முற்றுகை
x
தினத்தந்தி 27 Sept 2020 8:06 PM IST (Updated: 27 Sept 2020 8:06 PM IST)
t-max-icont-min-icon

வேளாண் சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் சார்பில் நேற்று திருப்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது.

திருப்பூர்,

வேளாண் சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் சார்பில் நேற்று திருப்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது. இதற்கு விவசாய அணி மாவட்ட தலைவர் ரவி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ரமேஷ் முன்னிலை வகித்தார். இதில் மாநில துணைத்தலைவர் கர்ணன் மற்றும் இளைஞரணி பொதுச்செயலாளர் அழகுராஜா, தெற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ், மாநில குழு உறுப்பினர் மகேஷ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். போராட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வடக்கு போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story