திருவள்ளூர் அருகே லாரி கவிழ்ந்து விபத்து - டிரைவர், க்ளினர் காயமின்றி உயிர் தப்பினார்கள்


திருவள்ளூர் அருகே லாரி கவிழ்ந்து விபத்து - டிரைவர், க்ளினர் காயமின்றி உயிர் தப்பினார்கள்
x
தினத்தந்தி 30 Sept 2020 5:28 AM IST (Updated: 30 Sept 2020 5:28 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் டிரைவர், க்ளினர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் பண்ணூர் கிராமத்தில் இருந்து நேற்று முன்தினம் லாரி ஒன்று 24 டன் எடை கொண்ட துடைப்பத்தை ஏற்றிக்கொண்டு மராட்டிய மாநிலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை தர்மபுரியை சேர்ந்த சிங்கிரிசெட்டி (வயது 32) என்பவர் ஓட்டினார். கிளனராக தர்மபுரியை சேர்ந்த பச்சையப்பன் (52) என்பவர் உடன் சென்றார். அந்த லாரி நேற்று காலை 7 மணி அளவில் திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் வந்து கொண்டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரி டிரைவர், க்ளினர் ஆகியோர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

இதைத்தொடர்ந்து சாலையோரம் கவிழ்ந்த அந்த லாரியை 2 பொக்லைன் எந்திரம் மூலம் தூக்கி நிறுத்தி அதில் இருந்த துடைப்பத்தை வேறு ஒரு லாரியில் அதன் உரிமையாளர் ஏற்றி அனுப்பி வைத்தார். இதன் காரணமாக நேற்று திருவள்ளூர் பகுதியில் ½ மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story