திசையன்விளை உலக ரட்சகர் ஆலய சப்பர பவனி


திசையன்விளை உலக ரட்சகர் ஆலய சப்பர பவனி
x
தினத்தந்தி 5 Oct 2020 4:14 AM IST (Updated: 5 Oct 2020 4:14 AM IST)
t-max-icont-min-icon

திசையன்விளை உலக ரட்சகர் ஆலய திருவிழாவில் சப்பர பவனி நேற்று நடைபெற்றது. இதில் திரளானவர்கள் பங்கேற்று உப்பு, மிளகு காணிக்கை செலுத்தி வழிபட்டனர்.

திசையன்விளை,

திசையன்விளை உலக ரட்சகர் ஆலய 136-ம் ஆண்டு திருவிழா கடந்த 10 நாட்களாக வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. திருவிழாவில் தினமும் திருப்பலி, ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெற்றது.

நேற்று முன்தினம் சிறப்பு மாலை ஆராதனை நடந்தது. பின்னர் இரவு சப்பர பவனி நடைபெற்றது. 10-ம் திருநாளான நேற்று காலை நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் ஆயர் இல்ல தலைமைச்செயலாளர் நார்பட்தாமஸ், மறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நெல்சன் பால்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு புதுநன்மை வழங்கப்பட்டது.

சப்பர பவனி

மாலையில் ஆலயத்தை சுற்றி திருவிழா சிறப்பு சப்பர பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு, நேர்ச்சையாக உப்பு, மிளகு, மலர் மாலைகளை காணிக்கையாக செலுத்தி வழிபட்டனர். தொடர்ந்து இரவில் நற்கருணை ஆசீர் நடந்தது.

இன்று (திங்கட்கிழமை) காலை திருப்பலி, கொடியிறக்கம் நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை கிறிஸ்டியான், பங்கு மேய்ப்பு பணிக்குழு, அருட்சகோதரிகள், அன்பியங்கள், பக்தசபைகள் மற்றும் இறைமக்கள் செய்திருந்தனர்.

Next Story