பாலியல் வன்கொடுமைகளை தடுக்க புதிய சட்டம் இயற்றவேண்டும் ஜான்பாண்டியன் பேட்டி


பாலியல் வன்கொடுமைகளை தடுக்க புதிய சட்டம் இயற்றவேண்டும் ஜான்பாண்டியன் பேட்டி
x
தினத்தந்தி 5 Oct 2020 8:42 PM GMT (Updated: 5 Oct 2020 8:42 PM GMT)

பாலியல் வன்கொடுமைகளை தடுக்க புதிய சட்டம் இயற்றவேண்டும் ஈரோட்டில் ஜான்பாண்டியன் பேட்டி.

ஈரோடு,

தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் பெ.ஜான்பாண்டியன் நேற்று ஈரோட்டுக்கு வந்தார். முன்னதாக ஈரோடு கருங்கல்பாளையம் சோதனைச்சாவடி பகுதியில் மாவட்ட தலைவர் ஏ.செல்வராஜ் தலைமையில் அவருக்கு மாலை அணிவிக்கப்பட்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில் மாவட்ட செயலாளர் மயில்துரையன், மாநகர செயலாளர் குணா, தொழிற்சங்க செயலாளர் குமார், இளைஞர் அணி ஒன்றிய தலைவர் கார்த்தி, நிர்வாகிகள் ரமேஷ், சக்திவேல், சுப்பிரமணி, முத்துசாமி, மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

அதைத்தொடர்ந்து ஜான்பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உத்தர பிரதேச மாநிலத்தில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் இதுபோன்ற பாலியல் வன்கொடுமைகள் எங்கும் நடக்க கூடாது. இதனை தடுக்க பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களை தண்டிக்க கடுமையான புதிய சட்டத்தை இயற்ற வேண்டும். மத்திய அரசின் வேளாண் சட்ட மசோதாவை நாங்கள் வரவேற்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story