மாவட்ட செய்திகள்

படப்பை அருகே ஏரியில் மூழ்கி டிரைவர் பலி + "||" + The driver drowned in a lake near Padappai

படப்பை அருகே ஏரியில் மூழ்கி டிரைவர் பலி

படப்பை அருகே ஏரியில் மூழ்கி டிரைவர் பலி
படப்பை அருகே நண்பர்களுடன் குளிக்க சென்ற டிரைவர் ஏரியில் மூழ்கி பலியானார்.
படப்பை,

செங்கல்பட்டு மாவட்டம் முடிச்சூர் லட்சுமிநகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 46). இவர் வரதராஜபுரம் பகுதிகளில் உள்ள இரும்பு கடைகளில் டிரைவராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் இவருடன் பணியாற்றிவரும் நண்பர்களான சரவணகுமார்(22) நூர், (50) ஆகியோருடன் சேர்ந்து நேற்று முன்தினம் படப்பை அருகே மணிமங்கலம் பகுதியில் உள்ள பெரிய ஏரிக்கு குளிக்க சென்றுள்ளனர்.


இதையடுத்து ஏரியில் குளித்து கொண்டிருந்த 3 பேரில், சரவணகுமார், நூர், ஆகிய இரண்டு பேரும் கரைக்கு திரும்பி வந்த நிலையில், கோவிந்தராஜ் மட்டும் மாயமானதாக கூறப்படுகிறது.

ஆண் பிணம்

இது குறித்து மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே பெரிய ஏரியில் நேற்று ஆண் பிணம் ஒன்று மிதப்பதாக மணிமங்கலம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் ஏரியில் இறந்து மிதந்து கிடந்த வாலிபரின் உடலை மீட்டனர். பின்னர் போலீசார் விசாரணை செய்ததில், ஏரியில் மூழ்கி இறந்த நபர் கோவிந்தராஜ் என தெரியவந்துள்ளது. பின்னர் இறந்த உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மணிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பங்களாப்புதூர் அருகே ஆற்றில் மூழ்கி சிறுவன் சாவு நண்பர்களுடன் குளித்தபோது பரிதாபம்
பங்களாப்புதூர் அருகே நண்பர்களுடன் குளித்தபோது ஆற்றில் மூழ்கி சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
2. தஞ்சை சமுத்திரம் ஏரியில் கட்டப்பட்ட ஆதிமாரியம்மன் கோவில் இடிப்பு இந்து முன்னணி பிரமுகர் தற்கொலை மிரட்டலால் பரபரப்பு
தஞ்சை சமுத்திரம் ஏரியில் கட்டப்பட்ட ஆதிமாரியம்மன் கோவில் இடிக்கப்பட்டது. இந்து முன்னணி பிரமுகர் தற்கொலை மிரட்டலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
3. ஏரல் அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கி வாலிபர் சாவு
ஏரல் அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.