கொரோனா தொற்று பாதித்தவர்களின் வீடுகளில் தகரம் வைத்து அடைப்பது ஏன்? - சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
கொரோனா தொற்று பாதித்தவர்களின் வீடுகளை தகரம் வைத்து அடைப்பது ஏன் என சென்னை மாநகராட்சி மற்றும் தமிழக அரசிற்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை,
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரியங்கா உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளார். அவர் அளித்துள்ள மனுவில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த தனது கணவரை சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் சென்ற பிறகு, தங்களது வீடு தகரம் வைத்து அடைக்கப்பட்டதாக குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு, கொரொனா பாதிக்கப்பட்டவரின் வீடு மற்றும் அந்த பகுதியில் தகரம் அடிக்கபடுவதற்கான காரணம் என்ன? என்று கேள்வி எழுப்பினர். மேலும் எந்த விதியின் அடிப்படையில் தரகம் அடிக்கபடுகிறது எனக் கேட்ட நீதிபதிகள், மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசு, சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டனர். மேலும், தனக்கு தொற்று ஏற்பட்ட போது, மாநகராட்சி அதிகாரிகள் யாரும் வரவில்லை என நீதிபதி சத்தியநாராயணன் கூறினார்.

Related Tags :
Next Story