டிசம்பர் 31-ந் தேதி வரை மோட்டார் வாகன வரி செலுத்த கால அவகாசம் கவர்னர் கிரண்பெடி ஒப்புதல்


டிசம்பர் 31-ந் தேதி வரை மோட்டார் வாகன வரி செலுத்த கால அவகாசம் கவர்னர் கிரண்பெடி ஒப்புதல்
x
தினத்தந்தி 19 Oct 2020 3:43 AM IST (Updated: 19 Oct 2020 3:43 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி அரசிடம் இருந்து கவர்னர் மாளிகைக்கு கடந்த 11-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை 32 கோப்புகள் வந்துள்ளன. இதில் பெரும்பாலான கோப்புகளுக்கு கவர்னர் கிரண்பெடி ஒப்புதல் அளித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுச்சேரி அரசிடம் இருந்து கவர்னர் மாளிகைக்கு கடந்த 11-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை 32 கோப்புகள் வந்துள்ளன. இதில் பெரும்பாலான கோப்புகளுக்கு கவர்னர் கிரண்பெடி ஒப்புதல் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

போக்குவரத்து வாகனங்களுக்கு மோட்டார் வாகன வரி செலுத்த டிசம்பர் 31-ந் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 2 முதுநிலை பல் மருத்துவர்களுக்கு முதன்மை பல் மருத்துவர் பதவி உயர்வும், 14 தலைமை மருத்துவ அதிகாரிகளுக்கு கிரேடு பதவி உயர்வும், புதுவை கடற்கரையில் உள்ள பழைய நீதிமன்ற கட்டிட புனரமைப்புக்கு ரூ.14.65 லட்சத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி விற்பனைக்குழு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க ரூ.2 கோடியே 62 லட்சம், காரைக்கால் விற்பனைக்குழு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க ரூ.45.66 லட்சத்திற்கும் அனுமதி, புதுவை கால்நடை மருத்துவக் கல்லூரி ஊழியர்களின் சம்பளத்திற்கு ரூ.3 கோடியே 31 லட்சத்திற்கும், புதுவை கே.வி.கே. ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க ரூ.1 கோடியே 84 லட்சத்திற்கும், காரைக்கால் கே.வி.கே. ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க ரூ.17.57 லட்சத்திற்கு அனுமதி, பள்ளியில் 104 துணை முதல்வர்களுக்கு இறுதி சீனியர் பட்டியல் வெளியீடு, கால்நடை துறையில் மருந்துகள் வாங்க ரூ.73.26 லட்சத்திற்கு அனுமதி அளித்துள்ளார்.

மேற்கண்ட தகவலை கவர்னரின் சிறப்பு அதிகாரி தேவநீதிதாஸ் தெரிவித்துள்ளார்.

Next Story