திருச்செந்தூர் கோவிலில் சுவாமி ஜெயந்திநாதருக்கு அணிவிக்க 1¼ கிலோ தங்க கவசம்


திருச்செந்தூர் கோவிலில் சுவாமி ஜெயந்திநாதருக்கு அணிவிக்க 1¼ கிலோ தங்க கவசம்
x
தினத்தந்தி 19 Oct 2020 10:19 PM IST (Updated: 19 Oct 2020 10:19 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் கோவிலில் சுவாமி ஜெயந்திநாதருக்கு அணிவிக்க 1¼ கிலோ தங்க கவசம் சென்னை தொழில் அதிபர் காணிக்கையாக வழங்கினார்.

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நேற்று சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் ராமசாமி செட்டியார் தன்னுடைய குடும்பத்தினருடன் வந்து சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர், சுவாமி ஜெயந்திநாதருக்கு அணிவிப்பதற்காக 1 கிலோ 390 கிராம் எடையுள்ள தங்க கவசத்தை காணிக்கையாக வழங்கினார். அதனை கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) கல்யாணி பெற்றுக் கொண்டார்.

அப்போது கோவில் தக்கார் பிரதிநிதியும், ஓய்வுபெற்ற கால்நடைத்துறை உதவி இயக்குனருமான பாலசுப்பிரமணிய ஆதித்தன், கோவில் உதவி ஆணையர் செல்வராஜ், மக்கள் தொடர்பு அலுவலர் மாரிமுத்து, உள்துறை மேலாளர் வள்ளிநாயகம், அறநிலையத்துறை நகை சரிபார்ப்பு அலுவலர் சங்கர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story