குடவாசலில் 1,116 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் காமராஜ் வழங்கினார்.
குடவாசல்,
குடவாசல் வட்டத்திற்குட்பட்ட மஞ்சகுடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கூடுதல் கலெக்டர் கமல் கிஷோர் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள், உதவி கலெக்டர் பாலச்சந்திரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பாப்பா சுப்பிரமணியன், ஒன்றியக்குழு தலைவர் கிளாரா செந்தில், துணைத்தலைவர் தென்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அமைச்சர் காமராஜ் கலந்துகொண்டு 1116 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழியில் ஏழை-எளிய மக்கள் பயன்பெறும் வகையில் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நலத்திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். ஆதரவற்ற முதியோர்களை அடையாளம் கண்டு அவர்களின் துயரங்களை போக்குகின்ற வகையில் அவர்களுக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
ஓய்வூதியதிற்கான ஆணை
அந்த வகையில் மாவட்டம் முழுவதும் மக்களை நேரடியாக சந்தித்து மனுக்கள் பெறப்பட்டு, தகுதியின் அடிப்படையில் குடவாசல் தாலுகாவில் உள்ள 1,116 பயனாளிகளுக்கு முதியோர் ஊதியத்திற்கான ஆணை வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் குடவாசல் தாசில்தார் பரஞ்சோதி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கோபாலகிருஷ்ணன், முன்னாள் ஒன்றியக்குழு துணைத் தலைவர் ராஜேந்திரன், திருவாரூர் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் கலியபெருமாள், கல்வி புரவலர் குடவாசல் தினகரன், ஓகைதொடக்க கூட்டுறவு வங்கி தலைவர் சுவாமிநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆறுமுகம், சுப்பிரமணியன்,
ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி தலைவர்கள், அரசுத்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட பெருந்துறை ஒன்றியப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஒன்றியக்குழு அலுவலகத்தில் நடந்தது.
அ.ம.மு.க. பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் ஏழைகளுக்கு அன்னதானம், நலத்திட்ட உதவிகளை மத்திய மாவட்ட செயலாளர் ஏ.பி.ஆர். பக்தரட்சகன் வழங்கினார்.
ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி இன்று(வெள்ளிக்கிழமை) முதல் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதாக ரஜினி மக்கள் மன்ற கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் என்ஜினீயர் ரவி தெரிவித்துள்ளார்.