காஞ்சீபுரம் மாவட்டத்தில் 10,421 மாற்றுத்திறனாளிகளுக்கு நிதி உதவி


காஞ்சீபுரம் மாவட்டத்தில் 10,421 மாற்றுத்திறனாளிகளுக்கு நிதி உதவி
x
தினத்தந்தி 29 Oct 2020 3:56 AM GMT (Updated: 29 Oct 2020 3:56 AM GMT)

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 10,421 மாற்றுத்திறனாளிகளுக்கு நிதி உதவி கலெக்டர் தகவல்.

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக கொரோனோ தொற்று காலத்தில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடும் வகையில் 250 மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தினருக்கு ரூ.6 ஆயிரத்து 200 மதிப்பிலான அரிசி, பருப்பு உள்ளிட்ட 16 வகை மளிகை பொருட்கள் அடங்கிய பெட்டகம் அவர்களது வீட்டுக்கே சென்று வழங்கப்பட்டது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று காலத்தில் வாழ்வாதாரம் இழந்த 10,421 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1000 வழங்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் துறை மூலம் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூ.1,500 பெற்று வந்த மனவளர்ச்சி குன்றியவர்கள், கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தவர்கள் என 8,050 மாற்றுத்திறனாளிகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தபடி ஏப்ரல் மற்றும் மே மாத காலங்களுக்கு சேர்த்து ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்டது.

மேலும் காஞ்சீபுரம் மாவட்டத்தில் வெளியே சென்று மருந்து பொருட்கள் வாங்க இயலாத முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையுடன் இருந்த 23 மாற்றுத்திறனாளிகளுக்கு ஏர் பெட், வாட்டர் பெட், யூரோ டியூப், காட்டன் உள்பட்ட மருந்து பொருட்கள் தலா ரூ.7 ஆயிரத்து 500 வீதம் மொத்தம் ரூ.1 லட்சத்து 72 ஆயிரத்து 500-க்கான மருந்து பொருட்கள் அவர்களது வீட்டுக்கே சென்று வழங்கப்பட்டு மாற்றுத்திறனாளிகள் பயன் அடைந்துள்ளனர்்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story