மாவட்ட செய்திகள்

திருமக்கோட்டை அருகே கல்லூரி மாணவியை தாக்கி நகை பறிப்பு உறவினர் கைது + "||" + A relative was arrested for assaulting a college student near Thirumakkottai

திருமக்கோட்டை அருகே கல்லூரி மாணவியை தாக்கி நகை பறிப்பு உறவினர் கைது

திருமக்கோட்டை அருகே கல்லூரி மாணவியை தாக்கி நகை பறிப்பு உறவினர் கைது
திருமக்கோட்டை அருகே கல்லூரி மாணவியை தாக்கி நகை பறித்த உறவினரை போலீசார் கைது செய்தனர்.
திருமக்கோட்டை,

திருவாரூர் மாவட்டம், திருமக்கோட்டை அருகே உள்ள மான்கோட்டை நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகள் மோனிஷா (வயது21). இவர் மன்னார்குடி அரசு கலைக்கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். கொரோனா ஊரடங்கால் கல்லூரி மூடப்பட்டுள்ளதால் ஆன்லைன் வகுப்பில் படித்து வருகிறார். இவரது உறவினர் பாலையக்கோட்டை தோப்புத்தெருவை சேர்ந்த வசந்த ராஜ். இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தார்.

நகை பறிப்பு

இந்தநிலையில் கடந்த 1 மாதத்திற்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார். சம்பவத்தன்று மோனிஷா வீட்டிற்கு வசந்த்ராஜ் வந்துள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த வசந்த்ராஜ், மோனிஷாவை தாக்கி அவர் கழுத்தில் கிடந்த 1 பவுன் நகையை பறித்து சென்றுவிட்டார். இதில் காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பாஸ்கர் திருமக்கோட்டை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் திருமக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து வசந்த்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மகளிர் சுயஉதவிக்குழுவினரிடம் வட்டியில்லாமல் கடன் தருவதாக ரூ.1½ கோடி மோசடி; 4 பேர் கைது
மகளிர் சுயஉதவிக்குழுவினரிடம் வட்டியில்லாமல் கடன் தருவதாக கூறி ரூ.1½ கோடி மோசடி செய்த வழக்கில், 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. கல்பாக்கம் அருகே இறந்து கிடந்த பெண் அடையாளம் தெரிந்தது கொலை செய்ததாக 2 பேர் கைது
கல்பாக்கம் அருகே இறந்து கிடந்த பெண் அடையாளம் தெரிந்தது. அவரை கொலை செய்ததாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. சவுகார்பேட்டையில் 3 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கு: 3-வது மாடியில் இருந்து குதித்து நிதி நிறுவன அதிபர் தற்கொலை
சவுகார்பேட்டையில் 3 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளி அளித்த வாக்குமூலத்தின்படி, விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிதி நிறுவன அதிபர் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தற்கொலை செய்தார்.
4. வங்கி கணக்கில் இருந்து ரூ.47.60 லட்சம் மோசடி சென்னையில் அதிகாரி உள்பட 2 பேர் கைது
இறந்துபோன வங்கி வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து நூதனமான முறையில் ரூ.47.60 லட்சம் பணத்தை மோசடி செய்த முன்னாள் வங்கி அதிகாரி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
5. பெங்களூருவில், கூரியர் நிறுவனத்தில் ரூ.20 லட்சம் போதைப்பொருட்கள் சிக்கியது 4 பேர் கைது
பெங்களூருவில் கூரியர் நிறுவனத்தில் ரூ.20 லட்சம் மதிப்பிலான போதைப்பொருட்கள் சிக்கியது தொடர்பாக கேரளாவை சேர்ந்த பெண்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.