டெங்கு பரவாமல் சுற்றுப்புறத்தை பராமரிக்க வேண்டும் கலெக்டர் அருண் வேண்டுகோள்


டெங்கு பரவாமல் சுற்றுப்புறத்தை பராமரிக்க வேண்டும் கலெக்டர் அருண் வேண்டுகோள்
x
தினத்தந்தி 6 Nov 2020 8:57 AM IST (Updated: 6 Nov 2020 8:57 AM IST)
t-max-icont-min-icon

டெங்கு பரவாமல் தடுக்க சுற்றுப்புறத்தை பராமரிக்க வேண்டும் என்று கலெக்டர் அருண் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுச்சேரி, 

புதுவையில் உள்ள 34 துறைகள் மற்றும் அமைப்புகள் ஒருங்கிணைந்து பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையிலும், டெங்கு நோய் பரப்பும் கொசுக்களை ஒழிக்கவும் தீவிரமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்காக சுகாதாரத் துறை மற்றும் உள்ளாட்சித் துறை ஒருங்கிணைந்து அன்றாட களஆய்வு பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக தினசரி ஒருங்கிணைந்து கூட்டு டெங்கு ஒழிப்பு பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டெங்கு நோய் பரப்பும் வகையில் சுகாதார சீர்கேடு இருந்தால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து நகராட்சி மூலம் அபராதம் வசூலிக்கப்படுகிறது.

சுற்றுப்புற பராமரிப்பு

எனவே பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் தங்கள் வீடு மற்றும் நிறுவனங்களில் தண்ணீர் தேங்காதவண்ணம் சுத்தமாக சுற்றுப்புறத்தை பராமரித்து வர வேண்டும். புதுவையில் கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வரும் நிலையில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கைகளை சோப்புப் போட்டு அடிக்கடி கழுவுதல் போன்ற தடுப்பு முறைகளை தவறாமல் கடைப்பிடித்து டெங்கு மற்றும் கொரோனா நோய் இல்லாத புதுவையை உருவாக்க ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story