மாவட்ட செய்திகள்

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்தது திருக்குறுங்குடி பகுதியில் கால்வாய் உடைப்பு + "||" + Canal breach at least in Thirukurungudi area due to flood in Courtallam falls

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்தது திருக்குறுங்குடி பகுதியில் கால்வாய் உடைப்பு

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்தது திருக்குறுங்குடி பகுதியில் கால்வாய் உடைப்பு
குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு நேற்று குறைந்தது. திருக்குறுங்குடி பகுதியில் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டது.
தென்காசி, 

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த 4 நாட்களாக பலத்த மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்த மழையினால் மூன்று நாட்களாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயின் அருவிக்கரையில் இருந்த பெண்கள் உடை மாற்றும் அறை இடிந்து விழுந்தது. அருவிகளில் மரத்தடிகள் வந்து விழுந்தன.

இந்த நிலையில் நேற்று காலையில் இருந்தே குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை இல்லை. லேசான தூறல் மட்டும் இருந்தது. குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. மழை இல்லாத காரணத்தால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளது.

வீடுகள் சேதம்

திருவேங்கடம் சுற்றுவட்டார பகுதிகளில் பருவமழை தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கலிங்கப்பட்டி பகுதி-1 வீரணாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் அப்பாசாமி (வயது 42) என்பவரின் ஓட்டு கூரை வேயப்பட்ட மண் வீடு நேற்று அதிகாலை திடீரென இடிந்து விழுந்தது. மேலும் வடக்கு மலையடிபட்டி சேர்ந்த காசிராஜன் மனைவி குருவம்மாள் (40) என்பவருக்கு சொந்தமான ஓட்டு வீடும், பழனிச்சாமி (45) என்பவருக்கு சொந்தமான ஓட்டு வீடும் தொடர் மழையால் இடிந்து விழுந்தது. இதில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.

இதுபற்றி தகவல் அறிந்த அ.கரிசல்குளம் வருவாய் ஆய்வாளர் கோமதி, கலிங்கப்பட்டி பகுதி-1 கிராம நிர்வாக அலுவலர் ராஜலட்சுமி, காரிசாத்தான் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட வருவாய் துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு சேதங்களை மதிப்பீடு செய்தனர்.

விளை நிலங்கள் நீரில் மூழ்கின

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி பகுதியில் பெய்த பலத்த மழையால் தளவாய்புரம் பொன்னாகுறிச்சி கால்வாயில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கட்டுக்கடங்காத வெள்ளத்தாலும், தடுப்பணைகளில் தண்ணீர் தேங்கியதாலும் தளவாய்புரம் ஷட்டர் அருகே கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு அதன் வழியாக வெள்ளம் வெளியேறி வீணாகி வருகிறது. இதையடுத்து விவசாயிகள் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் மணல் மூட்டைகள் அடுக்கி தற்காலிகமாக சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் பொன்னாகுறிச்சி குளத்திற்கு தண்ணீர் செல்வது தடைபட்டுள்ளதால் குளம் நிரம்புவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதையடுத்து குளத்தை நம்பியுள்ள 300 ஏக்கர் விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களுக்கு தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கால்வாய் உடைப்புகளை சீரமைக்க வேண்டும். பழுதடைந்த ஷட்டரையும் சீர் செய்து, கால்வாயின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள 4 தடுப்பணைகளையும் அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுபோல கட்டளை உப்பாத்து ஓடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் திருவரங்கநேரி குளத்திற்கு செல்லும் கால்வாயில் அதிகளவில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த வெள்ளம் கரைகளை தாண்டி அருகில் உள்ள கட்டளை விளைநிலங்களுக்குள் புகுந்தது.

இதனைதொடர்ந்து 100 ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்யப்பட்டுள்ள வாழை, நெற் பயிர்கள் தண்ணீர் மூழ்கி நாசமானது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3 மாதங்களுக்கு பின் 6 லட்சத்திற்கு கீழ் குறைந்தது
நாட்டில் 3 மாதங்களுக்கு பின் மொத்த கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 6 லட்சத்திற்கு கீழ் குறைந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
2. மராட்டியத்தில் கொரோனா பரிசோதனை கட்டணம் 4வது முறையாக குறைந்தது
மராட்டியத்தில் கொரோனா பரிசோதனைக்கான ரூ.4,500 கட்டணம் அரசால் 4வது முறையாக குறைக்கப்பட்டு உள்ளது.
3. கொரோனா தாக்கம் குறைந்ததால் குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதிக்க வேண்டும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை
தென்காசி மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைந்ததால் குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதிக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
4. மேலும் 70 ஆயிரம் பேருக்கு தொற்று; இந்தியாவின் தினசரி கொரோனா பலி எண்ணிக்கை குறைந்தது
இந்தியாவில் மேலும் 70 ஆயிரத்து 589 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர். எனினும் நாட்டின் தினசரி கொரோனா பலி எண்ணிக்கை குறைந்திருக்கிறது.
5. கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 8 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

அதிகம் வாசிக்கப்பட்டவை