காட்பாடி அருகே அனுமதியின்றி செயல்பட்ட ‘பைப்’ கம்பெனிக்கு ’சீல்’
காட்பாடி தாலுகா கார்ணாம்பட்டு மதுரா ஆழ்வார்தாங்கல் பகுதியில் பைப் கம்பெனி ஒன்று அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்தது.
காட்பாடி,
காட்பாடி தாலுகா கார்ணாம்பட்டு மதுரா ஆழ்வார்தாங்கல் பகுதியில் பைப் கம்பெனி ஒன்று அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்தது. இதுகுறித்து தகவலறிந்த மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அந்த கம்பெனிக்கு நோட்டீஸ் வழங்கினர். இருந்தாலும் அதற்கு பதில் அளிக்காமல் கம்பெனி தொடர்ந்து செயல்பட்டு வந்தது. இதனால் கம்பெனிக்கு ‘சீல்’ வைக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது.
வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவின்பேரில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் ரவிச்சந்திரன், காட்பாடி தாசில்தார் பாலமுருகன் ஆகியோர் முன்னிலையில் பைப் கம்பெனிங்கு நேற்று ‘சீல்’ வைக்கப்பட்டது.
Related Tags :
Next Story