மாவட்ட செய்திகள்

பாலூர் கிராமத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா + "||" + Chamundeeswari Amman Temple Kumbabhishekam Festival in Balur Village

பாலூர் கிராமத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

பாலூர் கிராமத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
பாலூர் கிராமத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா அமைச்சர் கே.சி.வீரமணி பங்கேற்பு.
பேரணாம்பட்டு,

பேரணாம்பட்டு அருகே உள்ள பாலூர் கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகத்துக்கு தயார் செய்யப்பட்டது. இந்த நிலையில் திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா யாக பூஜைகளுடன் தொடங்கியது. விக்னேஷ்வரர் பூஜை, கோபூஜை, கலச பூஜை நடைபெற்று கணபதி, நவக்கிரக ஹோமம் மற்றும் யாக சாலை பூஜைகள் நடந்தன. மூன்றாம் கால யாக பூஜைக்கு பின்னர் மூலவர் சாமுண்டீஸ்வரி அம்மன் கரிக்கோல வீதி உலா வந்து அஷ்டபந்தனம் சாத்தப்பட்டது.

பின்னர் கடம்புறப்பாடு நடந்தது. அதனை தொடர்ந்து கோபுர கலசம், கோவில் விமானத்துக்கு கும்பாபிஷேகம் நடந்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்னர் சாமுண்டீஸ்வரி அம்மன் மூலவர் மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. விழாவிற்கு முன்னாள் எம்.எல்.ஏ. பாலூர் சம்பத் தலைமை தாங்கினார். மகா கும்பாபிஷேக விழாவினை மகாதேவ மலை ஸ்ரீலஸ்ரீ மகானந்த சித்தர் கலந்து கொண்டு நடத்தி வைத்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

விழாவில் சிறப்பு அழைபபாளர்களாக அமைச்சர் கே.சி.வீரமணி, மகாதேவ மலை சித்தர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பாலூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்கள் மற்றும் அண்டை மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமுண்டீஸ்வரி அம்மனை தரிசனம் செய்து வழிப்பட்டனர். விழா நடந்த 3 நாட்களும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை முன்னாள் எம்.எல்.ஏ. பாலூர் சம்பத் தலைமையில் ஆர்.ஜி.ஆர் பால்கோவா கம்பெனி மற்றும் ஈசார் பெட்ரோல் டீலர் கோவிந்தராஜ், கூட்டுறவு சங்க இயக்குனர் லோகநாதன், சண்முகம், பாலாஜி, ரமேஷ் உள்ளிட்ட திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி ஆருத்ரா தரிசன விழா வருகிற 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
2. அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோவிலில் 3-வது சோமவார விழா
அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோவிலில் 3-வது சோமவார விழா நடைபெற்றது. இதில் மலை அடிவாரத்தில் தேங்காய் உடைத்து பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
3. மருங்கூர் சுப்பிரமணியசாமிக்கு ஆறாட்டு விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு
மருங்கூர் சுப்பிரமணியசாமிக்கு மயிலாடியில் ஆறாட்டு விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
4. ஆண்களுக்கான குடும்பநல சிகிச்சை விழிப்புணர்வு பிரசார வாகனம் கலெக்டர் சமீரன் தொடங்கி வைத்தார்
தென்காசி மாவட்டத்தில் ஆண்களுக்கான குடும்பநல சிகிச்சை விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கலெக்டர் சமீரன் நேற்று தொடங்கி வைத்தார்.
5. கந்தசஷ்டி விழா நிறைவு: முருகன் கோவில்களில் திருக்கல்யாண உற்சவம்
கந்தசஷ்டி விழா நிறைவடைந்ததை தொடர்ந்து முருகன்கோவில்களில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.